• December 4, 2024

நடிகர் சூர்யாவிற்கு இயக்குனர் ஹரி எழுதிய அவசர கடிதம்

 நடிகர் சூர்யாவிற்கு இயக்குனர் ஹரி எழுதிய அவசர கடிதம்

இயக்குனர் ஹரி மற்றும் சூர்யாவின் படங்கள் எப்பொழுதும் நல்ல வரவேற்பை பெறுபவை. அவர்கள் இதுவரை ஆறு, வேல் மற்றும் சிங்கம் 3 பாகங்கள் படங்களில் ஒன்றாக பணிபுரிந்திருக்கின்றனர். சூர்யாவின் திரைத்துறை வளர்ச்சியில் இயக்குனர் ஹரி அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்களின் பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற படங்களே.

சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சூரியா தனது அடுத்த படமான ‘சூரரை போற்று’ திரைப்படத்தை Amazon Prime-ல், அக்டோபர் 30 ஆம் தேதி OTT தளத்தில் வரும் என்பதை அறிவித்தார். மேலும் தனது அடுத்த இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் சூரியா கூறினார். நாட்டில் தியேட்டர்களை மீண்டும் திறப்பதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், ‘சூரரை போற்று’ திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடுவதற்கான முடிவை சூரியா எடுத்தார்.

இதனிடையில் நடிகர் சூர்யா, தனது படமான சூரரை போற்று வெளியிடுவதற்கான தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு சூர்யாவிற்கு, இயக்குனர் ஹரி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், “நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து பணியாற்றியதால், எனது எண்ணங்களை முன்வைக்க விரும்புகிறேன். ஒரு ரசிகனாக, உங்கள் படத்தை தியேட்டர்களில் பார்க்க விரும்புகிறேன், OTT இல் அல்ல” என்று ஆரம்பித்து அவர் எழுதிய கடிதம் கீழே உள்ளது.