• October 12, 2024

வனிதாவின் புதிய கணவருக்கு நெஞ்சு வலி!

 வனிதாவின் புதிய கணவருக்கு நெஞ்சு வலி!

நடிகை வனிதா விஜயகுமாரை மணந்த, பீட்டர் பால் சமீபத்தில் திடீரென மார்பு வலி ஏற்பட்டதாக சென்னை போரூரில் உள்ள, ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பீட்டர் பால் உடல்நிலை குறித்து ஒரு பதட்டமான மற்றும் வேண்டுதல் போல டீவீட்டை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

“சொல்ல நிறைய இருக்கிறது, இப்பொது என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை. கடவுள் மிக பெரியவர், அவரை நான் நம்புகிறேன். எல்லாவற்றிக்கும் ஒரு காரணம் இருக்கும். வாழ்க்கை மிக கடினமானது. அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எல்லாம் சரி ஆகும். திரும்ப வாருங்கள், இந்த உலகை பாருங்கள்” என அந்த ட்வீட்-ல் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராபிக்ஸ் நிபுணரும், திரைப்பட தயாரிப்பாளருமான பீட்டர் பால் ஜூன் 27, 2020 அன்று வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத், “இன்னும் தன்னை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை” என்று புகார் அளித்த பின்னர், இவர்களது திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Vanitha Vijay Kumar wedding with Peter Paul

நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் ஆகியோர் சமூக ஊடகங்களில் வனிதா விஜயகுமாரை விமர்சித்தனர். இது பற்றிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக கடந்த மாதம் முழுக்க இருந்தது. கொரோனா பாதிப்பில் நாடும், நாட்டு மக்களும் இருக்கும் நிலையில், இவர்களது இந்த திருமணமும், இவர்களது வீடியோக்களும் அவ்வப்போது மக்களிடையே மிகுந்த வெறுப்பையும், கடுமையான விமர்ச்சனத்திற்கும் ஆளாகிறது.