• October 5, 2024

தமன்னாவின் பெற்றோருக்கு COVID-19

 தமன்னாவின் பெற்றோருக்கு COVID-19

மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து நடிகை தமன்னா தனது மும்பை இல்லத்தில் தங்கியுள்ளார். புதன்கிழமை அன்று தனது பெற்றோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமன்னா அறிவித்தார். அவரும் அவரது ஊழியர்களும் கொரோனா வைரஸ் சோதனை செய்தனர் என்றும் தமன்னா தெளிவுபடுத்தினார்.

Tamannaah with her parents

தமன்னாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை இங்கே படியுங்கள்

“என் பெற்றோர்கள் வார இறுதியில் லேசான COVID 19 அறிகுறிகளுடன் இருந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் உள்ள அனைவரும் உடனடியாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். முடிவுகள் இப்போது வந்துவிட்டன, துரதிர்ஷ்டவசமாக எனது பெற்றோர்களுக்கு நோய்த்தொற்று உறுதியானது.
அதன்பின் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தோம்.
மேலும் எங்கள் குடும்பத்தில் பலருக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று இல்லை என தெரியவந்தது. இறைவனின் அருளால், விரைவில் எனது பெற்றோர்கள் குணமடைய வேண்டுகிறேன்.”