
திரு. SPB அவர்களின் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள், நிச்சயம் ஒரு பெருமூச்சு விடும் செய்தி தான் இது. கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துவந்தார் SPB. ஆகஸ்ட் 13 அன்று, இரவு முதல் வென்டிலேட்டர் வசதியுடன் அடுத்தகட்ட சிகிச்சைக்கு அவரை மருத்துவர்கள் தயார் செய்தனர்.
அதை தொடர்ந்து அவர் உடல்நலம் பற்றிய பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளிவருவதை தவிர்க்க, அவரின் மகன் சரண், சில உண்மையான மருத்துவ தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
அதன்படி, ஆகஸ்ட் 26 புதன்கிழமை அன்று SPB அவர்களை பார்க்க சரண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மயக்கத்தில் இருந்துள்ளார். இன்று அவரின் உடல்நலத்தில் அதிக முன்னேற்றம் இருப்பதாகவும், அவரின் நுரையீரலும் சிறிது சிறிதாக நலம் பெற்று வருவதையும், மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் SPB அவர்களின் பாடலை அவரே கேட்டதாகவும், அதை கேட்டு அவர் பாட முயற்சி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். சரனுடன் அவர் பேச முயற்சி செய்ததாகவும், முடியாமல் போகவே, அதை எழுதி காட்டவும் முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் பேனாவை நிலையாக பிடிக்கமுடியவில்லை. கடந்த நாட்களை விட, இப்பொது அவரின் உடல்நலம் நல்ல முனேற்றத்தை அடைத்திருப்பதாகவும், அதற்கு SPB ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

இன்னும் சிறிது காலத்தில் அவர் முழுமையாக குணமாகி வருவார் என்றும், அவருக்காக குடும்பமே காத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
Today August 26th#SPBHealthUpdate #SPCharan @charanproducer #SPBalasubrahmanyam #SPbalasubramanyam #SPBalasubramaniam pic.twitter.com/NbTzEMEtf9
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 26, 2020Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesListen Free on YouTubeRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now