• September 12, 2024

உலக வரலாற்றில் இதுவரை ஒரு போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட மிக அசாதாரண உளவியல் யுத்த தந்திரம் (Psychological War Tactic) எது?

 உலக வரலாற்றில் இதுவரை ஒரு போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட மிக அசாதாரண உளவியல் யுத்த தந்திரம் (Psychological War Tactic) எது?

புலி அடிக்கும் முன்னரே கிலி அடிக்கும்

பல நேரங்களில் இது போன்ற உளவியல் தந்திரங்கள் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பல மன்னர்கள் இந்தத் தந்திரங்களை பயன்படுத்தி போரில் வெற்றி கொண்டனர்.

உதாரணமாக உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய மாவீரன் அலெக்சாண்டர்.

அவர் படையெடுத்துச் செல்லும் முன்னர் ஒரு சிறு குழுவை அந்த பகுதிக்கு அனுப்பி விடுவாராம்.

அவர்கள் அங்கிருக்கும் மக்களோடு ஒன்றாக கலந்து “மாவீரன் அலெக்சாண்டர் என்பவர் மிகப்பெரிய வீரர் அடிப்படை மிகவும் பலம் வாய்ந்தது” என்கின்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்தனராம்.

பின்னர் மாவீரன் அலெக்சாண்டர் அவர்களின் படை அந்தப் பகுதியில் செல்லும் பொழுது அப்பகுதி மக்களிடமும் படைவீரர்களிடமும் இனம் புரியாத ஒரு பயம் ஏற்படும்.

இந்த பயத்தின் காரணத்தால் எதிரி நாட்டுப் படைகள் அஞ்சி ஓடி விடுவார்களாம்.

இந்த தந்திரம் இன்றும் வல்லரசு நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதாவது அன்று போர் மூலம் எதிரி நாட்டை தகர்த்துக் கொண்டிருந்தனர் ஆனால் இன்று மனதில் பயத்தை விதைப்பதன் மூலம் மறைமுக பொருளாதார சண்டை உலகமுழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

கொரோனா பரவிய போது சாலையில் சென்றவர்கள் திடீரென விழுந்து துடிதுடித்து இறப்பதாகவும் அதை கண்ட உடன் அருகில் இருப்பவர்கள் விலகி ஓடுவது போலவும் காணொளிகள் பரப்பப்பட்டன.

இந்த அடிப்படையில் கொரோனா என்ற நோயின் மீது ஒரு பெரிய பயம் உருவாக்கப்பட்டது.

உண்மையில் கொரோனா பாதிப்பினால் இறந்தவர்களை விட கொரோனா பயத்தினால் இறந்தவர்களே மிக மிக அதிகம்.

இந்த பயம் அதிக பாதிப்பை தராத முதல் அலையின்போது மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் அதிக பாதிப்பை தந்த இரண்டாம் அலையின்போது உறவினர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவரின் அருகில் இருந்தே பார்த்துகொண்ட நிகழ்வு பல இடங்களில் காண முடிந்தது.