• July 27, 2024

“உங்க வீட்டு செல்ல நாய்களுக்கு..!” – No.. No.. இந்த உணவுகள்..

 “உங்க வீட்டு செல்ல நாய்களுக்கு..!” – No.. No.. இந்த உணவுகள்..

pet dog

பிள்ளைகளை எப்படி நாம் வளர்கிறோமோ, அதுபோலத்தான் நாய்களையும் செல்லமாக வீடுகளில் வளர்த்து வருகிறோம். மனிதனின் உற்ற தோழனாகவும் நண்பனாகவும் இந்த வளர்ப்பு பிராணி நன்றியோடு, நம்மோடும் குடும்பத்தாரோடும் உறவாக, குடும்பத்தில் ஒரு நபராகவே வளர்ந்து வரும்.

அப்படிப்பட்ட நாய்களை உங்கள் வீட்டில் வளர்க்கும் போது அதன் ஆரோக்கியத்துக்கு ஏற்றபடி குழந்தைகளுக்கு எப்படி உணவினை பார்த்து பார்த்து தருகிறோமோ, அது போலவே நாய் குட்டிகளுக்கும் உணவுகளை நாம் வழங்க வேண்டும்.

pet dog
pet dog

அந்த வகையில் நாய்களுக்கு சில உணவுகள் உடல்நல கோளாறுகளை விரைவில் ஏற்படுத்தும் அந்த உணவுகளை தவிர்த்து நல்ல உணவுகளை கொடுக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் நாய்களுக்கு எந்த உணவுகளை கொடுக்கக் கூடாது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நாய்களுக்கு திராட்சை மற்றும் உலர் திராட்சைகளை கொடுக்கக்கூடாது. இவற்றின் மூலம் நாய்களின் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த இரண்டு பொருட்களையும் கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

அதுபோலவே சாக்லேட்டில் இருக்கும் காபைன் மற்றும் தியோப்ரோமைன் நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். குறிப்பாக டார்க் சாக்லேட்டில் அதிக அளவு கோகோ பவுடர் இருப்பதால் இந்த பாதிப்பு அதிகரிக்கும். அதுபோல டீ, காபி போன்றவற்றிலும் இந்த வேதிப்பொருட்கள் இருப்பதால் இதை நீங்கள் உங்கள் வீட்டு செல்லங்களுக்கு கொடுக்கக் கூடாது.

pet dog
pet dog

வெங்காயம் மற்றும் பூண்டு கலந்த உணவுகளை நாய்க்கு வழங்க கூடாது. இதை பச்சையாகவோ சமைத்தோ நாய்களுக்கு கொடுக்கும் போது நாய்களின் ரத்த சிவப்பான்களில் இருக்கக்கூடிய செல்களை சேதப்படுத்தி ரத்த சோகையை ஏற்படுத்தும்.

சமைக்காத அசைவ உணவுகள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களும் நாய்களின் உடல்நலத்திற்கு ஆபத்தானது. எனவே இந்த பொருட்களையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதிக அளவு உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை நாய்களுக்கு வழங்குவதன் மூலம் அவற்றின் தோலில் இருக்கும் ரோமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு அதிகளவு முடி உதிரும் பிரச்சனை ஏற்படும் எனவே சிறிதளவு உப்பினை போட்டு கொடுப்பது தான் மிகவும் நல்லது.

pet dog
pet dog

மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்து உங்களுடைய செல்லப்பிராணிகளுக்கு ஆரோக்கியமான உணவை கொடுப்பதன் மூலம் அவற்றுக்கு எளிதில் நோய் தாக்குதல் ஏற்படாமல் இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த கருத்து பிடித்திருந்தால் நீங்கள் எங்களோடு உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இது போல உங்களுக்கு புதிய தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றை பகிரவும் மறக்க வேண்டாம்.