படிக்க மறுக்கும் குழந்தைகளை ஈசியாக ஜாலியாக படிக்க..! – இப்படி செய்யுங்க..

Easy learning
பொதுவாகவே குழந்தைகளை என்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் நேர்த்தியான முறையில் படிக்க வைப்பது என்பது பிரம்மபிரயத்தனமாகவே உள்ளது. ஏனெனில் இன்று படிக்கும் குழந்தைகளின் மனதை சிதறவடைய வைக்க பல காரணிகள் உள்ளது.
எனவே உங்கள் குழந்தைகளை ஜாலியாகவும், ஈசியாகவும் படிக்க வைக்க என்ன செய்யலாம் என்று மண்டையைப் பிடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் முறைகளை ஃபாலோ செய்வதின் மூலம் படு சுட்டியாக உங்கள் குழந்தைகளை படிக்க முடியும்.

இன்றிருக்கும் பாட திட்டத்தை குழந்தைகள் கடுமையாக உணர்வதாலோ என்னவோ, படிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த ஆர்வம் அற்ற நிலையை போக்கி, குழந்தைகளிடம் ஆர்வத்தை அதிகரித்து ஜாலியாக படிக்க அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
அதற்காக குழந்தைகள் படிப்பதற்கான சிறந்த சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதோடு, படிப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் அவர்கள் அருகிலேயே இருக்கும்படி வைத்து நீங்கள் துணையாக இருக்கலாம். குறிப்பாக கவனச் சிதறல் ஏற்படாத வகையில் பெற்றோர்கள் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு முன்கூட்டியே திட்டம் இடுவது என்பது சிறப்பானது. இந்த திட்டத்தை உங்களுக்கு நீங்கள் கற்றுக் கொண்டால் மட்டும் போதாது உங்கள் குழந்தைகளுக்கும் திட்டமிடுவதை நீங்கள் கற்றுக் கொடுங்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்கள் என்றால் அவற்றை ஊக்கப்படுத்துங்கள்.
வேடிக்கையான கற்றல் விளையாட்டுடன் கூடிய கற்றலை முன்கூட்டியே திட்டமிட்டு குழந்தைகளிடம் சொல்லும் போது ஆர்வத்தை அது தூண்டிவிடும்.
வீட்டுப்பாடம் முடிப்பதை உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு போட்டியாக மாற்றிக்கொண்டு முதலில் யார் வெற்றி பெறுகிறார்களோ? அவர்களுக்கு பரிசு தரப்படும் என்று போட்டி வைப்பதின் மூலம் அவர்கள் மும்மரமாக படிக்கின்ற பணியையும் எழுதும் பணியையும் மேற்கொள்வார்கள்.

கதையை விரும்பும் குழந்தைகளுக்கு பாடத்தை கதை வடிவில் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் மனதில் ஆழ பதிவதோடு ஆர்வத்தை தூண்டிவிடும் ஞாபகத்தில் நிரந்தரமாக அந்தப் பாடத்தை வைக்க உதவும்.
படிப்பதில் சிக்கல்கள் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பல நுட்பங்களை பயன்படுத்தி கற்பிக்கலாம். மேலும் படங்களை சத்தமாக சொல்வதின் மூலம் அவர்களின் மனதில் எளிதில் பதியக்கூடும்.
உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி வெகுமதி கொடுத்து ஊக்குவிக்கும் போது அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்கை எளிதில் முடிக்க முயற்சி செய்வார்கள்.

குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது புத்தகத்தை வாசிக்க சொல்ல வேண்டும். அதுபோலவே அவர்கள் வாசித்த பக்கங்கள் இருக்கும் முக்கிய கருத்துக்களை அவர்களை கொண்டே பேனாவில் எழுதச் சொல்வது குறிக்க வைப்பது போன்றவை நேர மேலாண்மையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்.
மன அழுத்தம் ஏற்படாதபடி அவர்களை படிக்க வைப்பது அவசியமான ஒன்று. கணிதத்தை விளையாட்டு வடிவில் கற்றுக் கொடுப்பதன் மூலம் ரிலாக்ஸ் ஆக குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். மேற்கூறிய வழிமுறைகளை ஃபாலோ செய்து உங்கள் குழந்தைகளின் கல்வித்திறனை நீங்கள் அதிகரித்துவிடலாம்.