• July 27, 2024

“சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நீல நண்டு..!” – படாத பாடுபடும் இத்தாலி..

 “சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நீல நண்டு..!” – படாத பாடுபடும் இத்தாலி..

Blue Crabs

இத்தாலிய கடற்கரைகளில் ஒன்று, இரண்டு மட்டுமே கண்ணில் தென்பட்ட நீல நண்டுகள் தற்போது அதிகரித்து இருப்பதின் காரணத்தால் அங்கு இருந்த நத்தைகளும் கடல்வாழ் உயிரினங்களும் ஏறக்குறைய மறைந்து விட்ட நிலையில் உள்ளது என்று கூறலாம்.

மேற்கு அட்லாண்டிக்கில் இருந்து தோன்றிய இந்த நீல நண்டுகள் தற்போது இத்தாலியின் பல பகுதிகளில் பரவி, உள்ளூரில் இருந்த மீன் இனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடி தனது இனத்தை பெருக்கிக் கொண்டது.

Blue Crabs
Blue Crabs

இப்போது இந்த நீல நண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், பிற கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய குறைந்துவிட்ட நிலையை பார்த்து இத்தாலியர்கள் வேதனையோடு இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த நீல நண்டுகள் சரக்கு கப்பல்கள் மூலம் இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்ற ஒரு கணிப்பும் உள்ளது. வடக்கு இத்தாலியில் உள்ள போ நதிக்கு அருகில் இவற்றின் பரவல் சற்று அதிகமாக காணப்படுவதாகவும், போ நதி படுக்கையில் சுமார் 90% நீல நண்டுகள் அங்கு இருந்த மீன்களை சாப்பிட்டு அவற்றை அழித்து விட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் இந்த நீல நண்டுகள் அதிகளவு மட்டியை உண்டு வாழ்வதால் எதிர்காலத்தில் மட்டும் மீன் உற்பத்தி மிகப்பெரிய பேரழிவை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அச்சம் தெரிவித்து இருக்கிறார்கள்.

Blue Crabs
Blue Crabs

இதனால் இந்த நீல நண்டுகளை அழிக்க தினமும் 12 டன் வரை அழிக்கக்கூடிய இலக்கை நிர்ணயித்து இத்தாலியின் சுற்று சூழல் மற்றும் பொருளாதார துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதனை அடுத்து இத்தாலி நாட்டு விவசாய அமைச்சர் பிரான்செஸ்கோ லோலோ பிரிகிடா, இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள போ நதி பள்ளத்தாக்கின் டெல்டா பகுதியை பார்வையிட்டு அங்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை உணர்ந்து கொண்டு உடனடியாக இந்த நண்டுகளை மீனவர்கள் பிடித்து அழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

Blue Crabs
Blue Crabs

பொதுவாகவே இத்தாலியர்கள் நத்தைகளை விரும்பி உண்ண கூடியவர்கள். ஆனால் நீல நிற நண்டுகள் அப்பகுதியில் அதிகரித்ததை அடுத்து 90% நத்தைகளையும் அவை காலி செய்து விட்டது. எனவே தான் நீல நண்டுகள் பெருகுவதை தடுக்க தற்போது இத்தாலி அரசு பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அதற்காக சுமார் 26 கோடி ரூபாயை ஒதுக்கி அவற்றின் அழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.