• October 5, 2024

“இந்திய விஞ்ஞானிகளின் தொடர் தற்கொலைகள்..!”- அவிழ்க்க முடியாத மர்மம்..

 “இந்திய விஞ்ஞானிகளின் தொடர் தற்கொலைகள்..!”- அவிழ்க்க முடியாத மர்மம்..

indian scientist

சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதுமே இந்தியாவை அண்ணாந்து பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான தருணத்தை இஸ்ரோ ஏற்படுத்திவிட்டது என்ற பெருமை ஒவ்வொரு இந்தியர்களின் மனதில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த வெற்றியை நாம் கொண்டாடி வருகின்ற வேளையில், இந்திய விஞ்ஞானிகளின் தொடர் தற்கொலைகளை பற்றி.. அந்த தற்கொலைகள் எதற்காக? யாருக்காக? நடந்தது? என்ற மர்ம முடிச்சு இன்று வரை அவிழ்க்கப்பட முடியாமல் உள்ளது.

indian scientist
Indian scientist

யார்? யார் ?அந்த விஞ்ஞானிகள் .. என்பது பற்றிய விவரமான தரவுகளையும், அந்த விஞ்ஞானிகள் இறந்த ஆண்டினை பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த விஞ்ஞானிகள் அனைவருமே இந்தியாவில் இருந்த மிக முக்கியமான விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முதல் இடத்தில் வரக்கூடிய விஞ்ஞானி 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி நமது நாட்டின் புகழ்பெற்ற அணு விஞ்ஞானியும், அணுசக்தி திட்டத்தின் தந்தையுமான ஹோமி ஜஹாங்கீர் பாபா ஆல் இந்திய விமானத்தில் 101 ல் இருந்து மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணம் செல்கிறார். விமானம் ஜெனிவாவை நெருங்கும் சமயத்தில் பிரான்சில் உள்ள மவுண்ட் பிளான் என்கின்ற பகுதியில் விபத்துக்கு உள்ளாகி அதில் இந்த அணு விஞ்ஞானி மற்றும் அவரோடு பயணம் செய்த 117 பேர் இந்த விமான விபத்தில் கொள்ளப்படுகிறார்கள்.

விமானம் விபத்தில் ஏற்பட காரணம் என்ன? அதில் இருந்த கருப்பு பெட்டி எங்கே சென்றது? என்று இன்று வரை தெரியவில்லை. இதன் மர்மம் என்ன என்று யாருக்கும் தெரியாது. இந்திய அரசால் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாமல் இன்று வரை இது கிடப்பில் உள்ளது என்ற அதிர்ச்சிகரமான விஷயத்தை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

Homi J. Bhabha
Homi J. Bhabha

இதுபோலவே 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி இந்திய விண்வெளி விஞ்ஞான விக்ரம் சாராபாய் கோவளத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் இறந்து போகும் அளவிற்கு எந்த ஒரு நோயும் அவருக்கு இல்லை. எனினும் அவரது உடல் போஸ் மாடம் செய்யப்படவில்லை. இன்று வரை இவரது மரணமும் ஒரு மர்மமாகவே உள்ளது.

அதுமட்டுமா? நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1994 ஆம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கேரளாவில் உள்ள ராக்கெட் மேன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட நம்பி நாராயணன் அவர்களை இந்தியாவின் இன்டெலிஜென்ஸ் பீரோ என்கிற உளவு அமைப்பு மற்றும் கேரள போலீசார் இணைந்து கைது செய்கிறார்கள்.

அதுவும் இவர் இந்தியாவிலேயே திரவ எரிபொருளை பயன்படுத்தி தொலைதூரத்திற்கு அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ தேவையான கிரையோஜெனிக் டெக்னாலஜியை உருவாக்கி முடிக்கக்கூடிய தருவாயில் அவரை கைது செய்து இருக்கிறார்கள். மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனை அடுத்து 1998 ஆம் ஆண்டு இவர் மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு அது பொய் என்று நிரூபணம் ஆகி மீண்டும் நம்பினாராயணனை இஸ்ரோவுக்கு அழைப்பு சந்தையான் திட்டத்தை தொடங்கினார்கள்.

Nambi Narayanan
Nambi Narayanan

மேலும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள கைக்கா அணு ஆராய்ச்சி நிலையத்தின்  விஞ்ஞானி லோகநாதன் மகாலிங்கம் என்பவர் காணாமல் போய்விடுகிறார். இவர் ஒரு மிகச்சிறந்த அணு விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து நாட்களுக்குப் பிறகு ஒரு ஆற்றில் சடலமாக இவரது உடலை கண்டறிகிறார்கள். இதனை அடுத்து இது தற்கொலை என்று கூறி வழக்கை மூடி விடுகிறார்கள்.

அதே காலகட்டத்தில் 2009 டிசம்பர் 30ஆம் தேதி பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இளம் அணு ஆராய்ச்சியாளர்களான உமாசிங் மற்றும் பார்த்த பிரதீம் பாக் ஆகிய இருவரும் மர்மமான முறையில் தீயில் கருகி இறந்திருக்கிறார்கள்‌ தடையவியல் அறிக்கையின்படி அந்த அறையில் தீப்பிடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறியிருக்கிறார்கள். எனினும் அந்த இடத்தில் எப்படி தீப்பிடித்து அவர்கள் இறந்தார்கள் என்பது இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் பொறியாளராக செயல்பட்ட மகாதேவன் பத்மநாப ஐயர் வயது 48 இவரது இல்லத்தில் இறந்து கிடந்தார். வழக்கம் போல இதனையும் தற்கொலை என்று கூறி ஊற்றி மூடி விட்டார்கள்.

Vikram Sarabhai
Vikram Sarabhai

இன்னும் இது போல இன்னும் பல விஞ்ஞானிகளின் மர்மமான தற்கொலைகளுக்கு விடை கிடைக்காத சமயத்தில் தான் பிரபல எழுத்தாளர் ஆன பிரையன் ஹார்வி என்பவர் ரஷ்யா இன் ஃபேஸ் என்ற புத்தகத்தில் நம்பி நாராயணன் கைதிக்குப் பின்னாலும் மேற்கூறிய இந்திய விஞ்ஞானிகளின் கொலைக்குப் பின்னும் அமெரிக்காவின் சிஐஏ இ என்ற உளவு அமைப்பு இருப்பதாக கூறியுள்ளது.

இதனை அடுத்து நமது இத்தனை காலம் வெற்றிக்கு தடையாக யார் இருந்தார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது. உலகை தன் ஆதிக்கத்தின் கீழ் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா நினைப்பது இதன் மூலம் ஊர்ஜிதம் ஆகி உள்ளது. எனும் இந்த விஷயம் உண்மைதானா என்பது உறுதியாக கூறி விட முடியாது.