“பிரக்யான் நிலவில் கண்டுபிடித்த ஜாக்பாட் தனிமங்கள்..!”- விழி பிதுங்கும் உலக நாடுகள்..
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது நிலவில் எந்த ஒரு நாடுகளும் இறங்காத தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் ரோவர் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இதனை அடுத்து இதில் இருந்த பிரக்யான் தனது வேலையை படு சுறுசுறுப்பாக ஆரம்பித்து விட்டது.
பிரக்யான் அளித்திருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போது உலக நாடுகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளி வந்த பிரக்யான் தற்போது தனது ஆய்வினை தெள்ளத் தெளிவாக மேற்கொண்டு இருப்பதால் நிலவில் இருக்கும் தனிமங்களை பற்றிய ஆய்வை செய்துள்ளது.
இதில் நிலவில் ஆக்சிஜன், சல்பர் ,அலுமினியம், அயர்ன், கால்சியம், குரோமியம், ஆர்கனைஸ், சிலிக்கான், டைட்டானியம் உள்ளிட்ட பல தனிமங்கள் இருப்பதாக எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து நிலவில் ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பது குறித்த ஆய்வில் தீவிரமாகி செயல்பட்டு வரும் பிரக்யான் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தைத் தேடி வருகிறது. மேலும் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தில் தான் நீர் இருக்கும். அதாவது ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் இருந்தால்தான் நீர் உருவாகும்.
இதனை அடுத்து வேறு எந்த ஒரு நாட்டவரும் நிலவில் சல்பர் இருந்ததை இதுவரை கண்டுபிடித்ததில்லை தற்போது நிலவில் சல்பர் இருப்பதையும், டைட்டானியம் இருப்பதையும் நமது பிரக்னியான் கண்டுபிடித்து மேலும் நிலவு பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய ஆவலை அதிகப்படுத்தியுள்ளது.
பூமியில் வெறும் 0.63 சதவீதம் மட்டுமே இந்த தனிமங்கள் உள்ள நிலையில், இதை கொண்டு தான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகிறது. இரும்பைப் போல இது கனமில்லாமல் லேசாக இருக்கும் உலோகம் ஆகும். எனவே இந்த தனிமங்களுக்கு உலக நாடுகளின் மத்தியில் பெருமளவு டிமாண்ட் உள்ளது.
மேலும் பூமியில் இந்த தனிமங்களுக்கு அதிகளவு கிராக்கி உள்ளதால் எதிர்காலத்தில் நிலவின் தென் துருவத்தில் கிடைத்திருக்கும் தனிம புதையல்களை எடுக்க காலனி படுத்து நாடுகளுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் இருக்கும். மேலும் இந்த புதையலை எடுப்பதற்காகவே நிலவை காலனி படுத்த பல நாடுகள் முயலும்.
எனவே நிலவு பற்றிய அடுத்த கட்ட நாட்களில் பல முக்கிய தரவுகளை எடுத்து அனுப்ப வாய்ப்புகள் உள்ளதாகவும், பிரக்யான் நிலவில் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று கூறிய நாடுகளின் வாய்களை அடைக்கும்படி அதனுடைய செயல்பாடு உள்ளது என்றும் கூறலாம்.
இந்த நிலையில் மீண்டும் பிரக்யான் தனது பணியை சீரிய முறையில் செயல்படுத்தி, மேலும் பல புதிய தகவல்களை தருவதின் மூலம் இஸ்ரோ உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்து விட்டது என கூறலாம்.
நிலவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டு இருக்கிறாள் என்று கூறிய கதைகளுக்கு பதிலாக, நிலவில் என்னென்ன உள்ளது என்று குழந்தைகளுக்கு கூறி உணவூட்டும் பழக்கம் இனி தமிழர்கள் மத்தியில் பரவும் என கூறலாம்.