• July 27, 2024

“வாய் பிளக்க வைக்கும் மாம்பழத்தின் விலை 1,62,000 ரூபாய்..!” – அட ஒரு மாம்பழத்தின் விலையா?

 “வாய் பிளக்க வைக்கும் மாம்பழத்தின் விலை 1,62,000 ரூபாய்..!” – அட ஒரு மாம்பழத்தின் விலையா?

mango

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட மாம்பழத்தை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராகி நரம்பு தளர்ச்சிகள் நீங்கி உடல் வலிமையாகும்.

உடலின் முக்கிய உறுப்புக்களாக இருக்கும் மூளை மற்றும் இதயத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய தன்மை மாம்பழத்திற்கு உண்டு. இதில் வைட்டமின் கே, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது.

mango
mango

அந்த வகையில் பழங்களிலேயே அதிக அளவு இனிப்பு சுவையோடு பலரையும் கவர்ந்திருக்கும் மாம்பழம் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். இந்த மாம்பழத்தை உண்பதின் மூலம் உங்கள் உடல் பளபளப்பாக மாறும் என்ற ரகசியம் தெரிந்தால் நிச்சயம் சீசன் சமயத்தில் மாம்பழத்தை வாங்கி அனைவரும் உண்பார்கள்.

கிலோ 60 முதல் 300 ரூபாய் வரை தான் நாம் பல வகையான மாம்பழங்களை வாங்கி சுவைத்திருப்போம். ஆனால் ஒரு மாம்பழத்தின் விலையை 1,62,000 என்றால் எப்படி இருக்கும். ஒரு பழத்தின் விலை லட்சத்தை கடந்த என்று நீங்கள் நினைக்கலாம் அப்படித்தான் ஒரு பழத்தை இந்த விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

mango
mango

இலங்கையில் இருக்கும் வவுனியாவில் ஒரு மாம்பழம் 1,62,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏல விற்பனையானது உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா உற்சவத்தில் ஆறாவது நாள் மாம்பழத் திருவிழாவாக கொண்டாடப்படும்.

அந்த மாம்பழத் திருவிழாவின் போது விநாயகர் பெருமாளுக்கு படைக்கப்பட்ட இந்த மாம்பழம் ஆனது கோயிலில் வளர்ச்சி நிதிக்காக ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் தான் இந்த ஒற்றை மாம்பழத்தை உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் சிந்துஜா என்பவர் 1,62,000 ஆயிரம் ரூபாய்க்கு இந்த மாம்பழத்தை ஏலம் எடுத்து இருக்கிறார்.

mango
mango

கடுமையான போட்டியில் மத்தியில் இந்த தொகையை செலுத்தி மாம்பழத்தை இவர் கைப்பற்றி விட்டார். இதனை அடுத்து இந்த பணத்தை கோயிலில் வளர்ச்சிக்காக பயன்படுத்துவார்கள் என தெரியவந்துள்ளது.

ஏற்கனவே ஞானப்பழத்திற்காக போட்டியிட்ட நிகழ்வில் விநாயகர் வென்ற கதை அனைவருக்கும் தெரியும். அது போல விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் இந்த விலைக்குப் போனதை அறிந்த அனைவரும் விநாயகர் பெருமானின் மகத்துவத்தை உணர்ந்து மெய் மறந்தார்கள் என கூறலாம்.