• October 12, 2024

காலி சோடா கேன்களை சேர்த்து வைத்து உலக சாதனை !!!

 காலி சோடா கேன்களை சேர்த்து வைத்து உலக சாதனை !!!

சோடாவையோ குளிர்பானத்தையோ குடித்து முடித்துவிட்டு அதன் பாட்டில்களை வீட்டில் சேர்த்து வைக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. ஆனால் அப்படி சோடா கேன்களை சேர்த்து வைத்து உலக சாதனை நிகழ்த்திய ஒருவரைப் பற்றிய பதிவுதான் இது.

பொதுவாக நாம் சோடா அல்லது குளிர்பானம் குடித்துவிட்டு அந்த கேனை வேறு ஏதாவது முறையில் உபயோகிக்க முயற்சிப்போம். இன்னும் ஒரு சிலருக்கு அந்த கேன்களை சேர்த்து வைத்து பழைய இரும்பு கடைகளில் விற்று காசு வாங்கும் பழக்கமும் உண்டு.

Coca-Cola® fanatic owns world's largest soda can collection | Guinness  World Records

ஆனால் அதிகமான கேன்களை சேர்த்து வைத்து கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்த கனடாவை சேர்ந்த கேரி பெங் என்பவரின் சாதனை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவர் 11308 சோடா கேன்களை சேர்த்து வைத்து இந்த சாதனையை புரிந்திருக்கிறார்.

2003ஆம் ஆண்டு முதல் கேரி பெங் இந்த தேன் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 108 நாடுகளில் விற்கப்படும் கேன்களை இவர் வாங்கி சேர்த்து வைத்துள்ளார். இவர் சேர்த்து வைத்துள்ள அனைத்துமே Coke கேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் 3 தேவையில்லாத கேன்கள் இருந்தாலே அதை குப்பையில் போட சொல்லி குடும்பத்தினர் எச்சரிப்பர். ஆனால் 11000 கோக் கேன்களை சேர்த்து வைத்த கேரியின் வீட்டில் எவரும் எதுவும் சொல்லவில்லையா ??? என்ற கேள்விதான் இவரது சாதனை வீடியோவை பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது.

கேரி பெங் சேர்த்து வைத்த 11308 கேன்களை கீழே உள்ள யூடியூப் வீடியோவில் காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.