எச்சரிக்கை ! தமிழகத்திற்கு orange Alert !!!
இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் அதிகமாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இதற்கு முன் பெய்த கன மழையினால் ஏற்பட்ட சேதங்களை அரசாங்கம் சரி செய்துவரும் நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நவம்பர் 25ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடுமாம். இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாளைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணிக்கிறது.
இந்நிலையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு அதிகம். இன்று இரவிற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் உருவாகும் என கணிக்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் எச்சரிக்கைகளை உள்வாங்கி மக்கள் அனைவரும் இந்த மழை காலத்தை பாதுகாப்பான முறையில் எதிர்கொள்ளும்படி deep talks தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.