• September 9, 2024

மண் பாத்திரத்தில் சமைத்தால் என்ன நடக்கும்.. ரகசியம் தெரியுமா? வாங்க படிக்கலாம்..

 மண் பாத்திரத்தில் சமைத்தால் என்ன நடக்கும்.. ரகசியம் தெரியுமா? வாங்க படிக்கலாம்..

pot cooking

மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படி உங்களது ஊட்டச்சத்து குறையாமல் இருப்பதற்கு நீங்கள் சமைக்கக்கூடிய பாத்திரம் மிக முக்கியமான ஒன்றாகும்.

இன்று நவீன யுகத்தில்  நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது. குறிப்பாக நான் ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது என கூறலாம். 

pot cooking
pot cooking

இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் அவை கேள்விக்குறியாக தான் உள்ளது. நமது முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். 

நோய்கள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்று என்றாவது நீங்கள் யோசித்துப் பார்த்தது உண்டா? அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு மிக எளிதில் விடை கிடைக்கும்.

இன்று சமையல் அறைகளில் அதிக அளவு பயன்படுத்தப்படும் அலுமினிய குக்கர்கள் அனைத்தும் உடலுக்கு பாதகம் செய்யக்கூடிய பொருட்கள் தான் என்பது உங்களுக்கு தெரியாதா?

இதனால் ஏற்படுகின்ற பல விளைவுகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். குறிப்பாக அதிகரித்து இருக்கும் புற்று நோய்களுக்கு காரணமாக கூட இவற்றை நாம் கூறலாம்.

pot cooking
pot cooking

ஆனால் நமது முன்னோர்கள் பயன்படுத்திய மண் பானைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தது. அறிவியல் வளராத காலத்தில் அவர்கள் எப்படி இந்த மண் பானைகளை சமைகளுக்கு பயன்படுத்தினார்கள், என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் நமது முன்னோர்கள் பெரும்பாலும் மண் பாத்திரங்களை தான் சமையலுக்கு பயன்படுத்தினார்கள். இந்த மண்பாண்டங்களில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் மெதுவாகவும், ஒரே சீராகவும் பரவுவதால் சத்துக்கள் அழியாமல் சமைக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் மண் பாத்திரங்களில் இருக்கும் நுண் துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவதால் சரியான பதத்தில் வைட்டமின்கள் நம் உடலுக்கு கிடைக்கும்.

pot cooking
pot cooking

மேலும் மண் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவுகள் பல மணி நேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும் போது எண்ணெய் பயன்பாடும் குறைவாகவே இருக்கும்.

மண் பாத்திரத்தில் சமைப்பதின் மூலம் உணவில் இருக்கும் அமிலத்தன்மை சமப்படுத்தப்படும். உப்பு, புளி சுவையுள்ள உணவுகளை சமைக்கும் போது உலோகப் பாத்திரத்தில் சமைப்பதற்கு பதிலாக மண் பாண்டத்தில் சமைப்பதால் எந்த வேதி மாற்றமும் ஏற்படாது.

எனவே தான் மண்பாண்டமானது உணவு சமைக்க உகந்தது இதன் மூலம் ஆரோக்கியம் பெரிதளவு பேணிப் பாதுகாக்கப்பட்டது என கூறலாம்.