
Top education university
“கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்ற வார்த்தைக்கு ஏற்ப உலக அளவில் இருக்கும் பல டாப் கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து மொத்தம் 91 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது என்ற ஆச்சரியமான தகவலை இந்தக் கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தற்போது உலகின் டாப் பல்கலைக்கழகங்களின் லிஸ்ட்டை டைம்ஸ் கல்வி அமைப்பு வெளியீட்டு உள்ளது. இதில் உலகில் இருக்கும் டாப் 10 கல்வி நிறுவனங்கள் பற்றியும் ஏனைய கல்வி நிறுவனங்கள் பற்றிய செய்திகள் உள்ளது.
இதில் இந்தியாவிலும் தமிழகத்திலும் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் எந்த இடத்தை பெற்றுள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த தரவினை ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனை சேர்ந்த டைம்ஸ் உயர் கல்வி அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

இந்த தரவரிசையை கல்வி நிறுவனங்கள் கற்பிக்கக் கூடிய திறன் மற்றும் ஆராய்ச்சி தரம், தொழில்துறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த லிஸ்ட்டை வெளியிடுவார்கள்.
அந்த வகையில் இந்த லிஸ்டில் இந்தியாவைச் சேர்ந்த மொத்தம் 91 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து இருக்கிறது. சென்ற ஆண்டு வெறும் 75 பல்கலைக்கழகங்கள் மட்டும் இடம் பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 91 என்ற இலக்கை எட்டிப் பிடித்துள்ளது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Rajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowஇந்த லிஸ்டில் முதல் இடத்தை தட்டிச் சென்றது பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். இரண்டாவது இடத்தை ஸ்டோன் போர்ட் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. மேலும் மூன்றாவது இடத்தில் மாசசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனமும் நான்காவது இடத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் உள்ளது.

இந்த மூன்று கல்வி நிறுவனங்களும் அமெரிக்காவை சேர்ந்ததாகும். ஏறக்குறைய இந்த லிஸ்டில் டாப் 25 இடங்களில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து 16 பல்கலைக்கழகங்களும் பிரிட்டனிலிருந்து நான்கு பல்கலைக்கழகங்களும் இடம் பிடித்துள்ளது.
சீனாவை சேர்ந்த இரண்டு பல்கலைக்கழகங்களும், சுவிட்சர்லாந்து, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து தலா ஒரு பல்கலைக்கழகமும் இந்த லிஸ்டில் உள்ளது.
நம் நாட்டைப் பொறுத்தவரை பெங்களூருவை சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் முதல் இடத்தில் இருக்கிறது. இது 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இந்த கல்வி நிறுவனம் டாப் 250 க்குள் நுழைந்துள்ளது. இதன் ரேங்கிங் கடந்த நான்கு ஆண்டுகளை விட தற்போது முன்நிலைக்கு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த லிஸ்டில் அதிக பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய நாடாக இந்தியா நான்காவது இடத்தை பெற்ற உள்ளது. இந்தியாவிலிருந்து 901 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் இதில் 51 பல்கலைக்கழகங்கள் தென் மாநிலத்தைச் சார்ந்தது.
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து 22 பல்கலைக்கழகங்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கேரளாவில் இருக்கும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் 51 முதல் 600 ரேட்டிங் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்து 61 முதல் 800 இருக்கும் பெரும்பாலான இந்திய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இதில் இடம் பிடித்துள்ள பல்கலைக்கழகங்கள் அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் வேலூர் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவை இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

மேலும் 800 முதல் 1000 ரேங்க்களில் ஆறு பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளது. இது தமிழ்நாட்டில் இருந்து அமிர்தா விஷ்வா வித்யா பீடம், கலசலிங்கம் அகாடமி ஆப் ரிசர்ச் அண்ட் எஜுகேஷன், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
இப்போது புரிந்து இருக்கும் தமிழ்நாட்டின் கல்வித் தரம் எப்படி உள்ளது உலக அளவில் இதன் தரம் எப்படி இருக்கிறது என்று.