• November 8, 2024

இப்படியெல்லாம் செஞ்சீங்கன்னா உங்க செல்லப்பிராணி நாய் – உங்களை லைக் பண்ணாது..

 இப்படியெல்லாம் செஞ்சீங்கன்னா உங்க செல்லப்பிராணி நாய் – உங்களை லைக் பண்ணாது..

Pet Dog

இன்று பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் அதிகளவு காணப்படுகிறது. இந்த செல்லப்பிராணிகளை வளர்த்துவதின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு அவர்கள் வீட்டில் ஒருவராக செல்லப்பிராணி இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

அப்படிப்பட்ட செல்லப்பிராணிகளில் முதல் இடத்தை பிடித்திருப்பது நாய்கள் தான். நன்றியுள்ள விலங்கான இந்த நாயானது மனிதர்களோடு மனிதர்களாக எளிதில் பழகுவதோடு முடிந்தவரை அவர்களுக்கு நன்மையை செய்யக்கூடிய விலங்காக உள்ளது.

Pet Dog
Pet Dog

அப்படிப்பட்ட இந்த நாய்களுக்கு சுத்தமாக பிடிக்காத சில விஷயங்கள் உள்ளது. இந்த விஷயங்களை செய்யக்கூடிய மனிதர்களின் செயல்களை அவை பெரும்பாலும் விரும்புவதில்லை. எனினும் நாம் அவற்றை விடாமல் இது போன்ற செயல்களை செய்வதின் மூலம் அவற்றுக்கு நம் மேல் வெறுப்பு ஏற்படுகிறது என்பதை நம்மால் இன்றுவரை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

அப்படி நான் செய்யக்கூடிய விஷயங்களில் என் வீட்டு செல்லக்குட்டி நாய்க்கு எது பிடிக்காது என்பதை நீங்கள் யோசிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரிகிறது. அந்த வகையில் உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லக்குட்டி நாயை கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது போன்ற செயல்களில் நீங்கள் ஈடுபட்டால் அது உங்கள் செல்லக் குட்டி நாய்க்கு பிடிக்காது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் நினைக்கலாம் நீங்கள் நாயை கட்டி அணைக்கும் போது அது ரிலாக்ஸ் ஆக இருக்கும் என்று ஆனால் அது உண்மையல்ல. இது நாய்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். இதற்கு பதிலாக நீங்கள் நாயை மார்பில் வைத்து அல்லது முதுகில் வைத்து பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

Pet Dog
Pet Dog

இன்னும் சில பேர் நாயின் முகத்திற்கு அருகே செல்வது அல்லது அதன் பிரைவேட் ஸ்பேஸ் நுழையும் செயல்களை ஒருபோதும் விரும்பாது. எனவே இது போன்ற தவறுகளை நீங்கள் இனிமேலும் செய்யாதீர்கள்.

நாய்கள் மோப்பம் பிடிக்கும் போது நீங்கள் அவற்றை தடுக்கக்கூடாது. குறிப்பாக வாக்கிங் அழைத்துச் செல்லும் போது அது மோப்பம் பிடித்தபடி வந்தால் அதற்கு நீங்கள் அனுமதி கொடுங்கள். அதை விடுத்து அதை தடுப்பதை அவை விரும்பாது.

நாய்களின் மன ஆரோக்கியத்தை பேணுவதற்கு நீங்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவை மனிதர்கள் போல சிலதை விரும்புவது கிடையாது. உங்களது உடல் மொழியை உணர்ந்தால் அவற்றிற்கு பயம் ஏற்படக்கூடும். இதனால் மனப்பதட்டம் அல்லது கவலை நிலைக்கு அது செல்லும். அனாவசியமாக உங்கள் செல்லங்களை அடிப்பது திட்டுவது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

Pet Dog
Pet Dog

நீங்கள் பயன்படுத்தும் வாசனைத்  திரவியங்கள் நாய்களின் மூக்குகளில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வாசனை அவற்றுக்கு பிடிக்காது. எனவே சென்ட் அடித்து விட்டு அதன் பக்கத்தில் நீங்கள் செல்லுவதை தவிர்த்து விடுங்கள்.

தனியாக நாய்கள் இருக்காது. அவற்றுக்கு எப்போதும் ஒரு துணை தேவை என்ற உணர்வில் தான் இருக்கும். எனவே நீங்கள் அவற்றை தனியாக வீட்டை விட்டு செல்வதை தவிர்த்து விடுங்கள். இதனால் மனதளவில் அவற்றிற்கு பாதிப்பு ஏற்படும்.

நாய்களுக்கு துணிகளை அணிவித்து பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். இவற்றை அவை விரும்புவதில்லை. மாறாக வெறுக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.