• October 7, 2024

இது நரியா நாயா ? விசித்திர விலங்கின் கதை !!!

 இது நரியா நாயா ? விசித்திர விலங்கின் கதை !!!

நரி வகையிலேயே மிகவும் சிறிய நரியான பென்னெக் நரி (Fennec Fox) எனப்படும் cute-ஆன நரியைப் பற்றிய பதிவுதான் இது. இந்த வகை நரிகள் வட ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதிகளில் வசிப்பவை ஆகும்.

பார்ப்பதற்கு ஒரு அழகிய நாயைப் போல காட்சியளிக்கும் இந்த நரி எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், மனிதர்களுடன் கொஞ்சி விளையாடும் தன்மையையும் பெற்றது. என்னதான் மனிதர்களுக்கு நண்பனை போல இந்த நரி காட்சியளித்தாலும் இந்த பென்னெக் நரி ஒரு காட்டு விலங்கு தான்.

Fennec Fox | San Diego Zoo Animals & Plants
Fennec Fox

மற்ற நரிகளைப் போல இந்த பென்னெக் நரியும் வேட்டையாடி தான் உணவு தேடும். சிறுசிறு பூச்சிகள், பல்லிகள், நத்தைகள், பறவைகள் போன்றவற்றை இந்த நரி வேட்டையாடி இரையாக்கும். ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இந்த நரிகளை வீட்டில் வைத்து வளர்ப்பவர்களும் உண்டு. இந்த வகை நரிகள் எப்போதும் கூட்டமாகவே திரியுமாம்.

கூட்டமாக சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்தாலும், வேட்டையாடும் நேரங்களில் தனித் தனியாகவே சென்று தங்களுக்கான இரைகளை தேடிக் கொள்ளுமாம். சஹாரா பாலைவனத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த வகை நரிகளை கொஞ்சி விளையாடுவது வழக்கம்.

இந்த cute ஆன நரியை வைத்து சமூக வலைதளங்களிலும் பல வீடியோக்கள் வலம் வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களைப் போலவே வளர்ப்பவர்களிடம் செல்லமாக கொஞ்சி விளையாடுகிறது இந்த அதிசய குட்டி நரி.

Best 30+ Fennec Fox fun on 9GAG

இந்தப் பென்னெக் நரியின் வாழ்நாள் ஏறத்தாழ 10 முதல் 12 ஆண்டுகள் என கணிக்கப்படுகிறது. இதன் காதுகள் நீளமானது மட்டுமின்றி, கூர்மையானதும் கூட. தனக்குத் தேவையான இரைகள் தூரத்தில் இருப்பதை, செவி மூலம் கேட்டு அறிந்து கொள்ளும். இந்த நரிகளின் காதுகள் 4 முதல் 6 இன்ச் நீளம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

நீளமான காதுகள் அதன் உடல் சூட்டை குறைக்கவும் பயன்படுகிறது. பென்னெக் நரியின் தோல் சஹாரா பாலைவனத்தின் இரவுநேர குளிரை சுலபமாக சமாளிக்கும் வகையில் ஒரு போர்வையை போல் அமைந்திருக்கும். இந்த வகை நரிகள் தனது இரைகளை பதுக்கி வைத்து அடுத்த வேளை சாப்பாட்டுக்கு சேர்த்து வைக்கும் பழக்கம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அழகிய பென்னெக் நரியின் எண்ணிக்கையானது குறைந்து கொண்டே வருவது வருத்தமளிக்கும் விஷயமாகும். குறிப்பாக வட ஆபிரிக்காவின் சில பகுதிகளில் இந்த வகை நரிகளை மனிதர்கள் வேட்டையாடுகிறார்கள் என்ற செய்திகள் அவ்வப்போது வெளிவரும். இந்த வகை நரிகள் பூச்சிகளையும், புழுக்களையும் அதிகம் உண்ணுவதால் பூச்சி, புழுக்களால் பயிர்கள் நாசம் அடைவது தவிர்க்கப்படும் என விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Meet Trixie: A fennec fox from North Africa

இந்த அழகிய பென்னெக் நரிகள் காப்பாற்றப்பட வேண்டும் எனவும், இந்த இனத்தை பாதுகாக்க நடவடிக்கைகளை விலங்குகளைப் பாதுகாக்கும் தன்னார்வ நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த அழகிய பென்னெக் நரி வீட்டிற்குள் சுற்றித்திரியும் வீடியோ ஒன்றை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.