2027 முதல் புகைபிடிக்க தடை ! அதிரடி சட்டம் !

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என திரைப்படங்களிலும் சிகரெட் பாக்கெட்டுகளிலும் பார்த்திருப்போம். அப்பேர்ப்பட்ட தீங்கு விளைவிக்கும் சிகரெட்டை 2027ஆம் ஆண்டு முதல் 14 வயதுக்குட்பட்ட எவரும் புகைபிடிக்கக் கூடாது எனும் புதிய சட்டத்தை நியூசிலாந்து அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே 18 வயதுக்குட்பட்டோர் அந்த நாட்டில் புகைபிடிக்கக் கூடாது எனும் சட்டம் இருந்தாலும், கடைக்கு சென்று சிகரெட்டை யார் வேணுமானாலும் வாங்கிக் கொள்ளும் நிலையே இருந்து வந்தது. வருங்காலத்தில் நாட்டை புகையில்லா நாடாக மாற்ற நியூசிலாந்து அரசாங்கம் வருகிற 2027ஆம் ஆண்டு முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிகரெட்டை வாங்கி புகைபிடிக்கக் கூடாது எனும் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

இந்த சட்டம் குறித்து நியூசிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆயிஷா கூறுகையில், “வயதில் சிறியவர்கள் எந்த ஒரு காரணத்தாலும் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காகவே இந்த சட்டத்தை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்”, எனக் கூறியுள்ளார்.
இந்த சட்டத்தை நிறைவேற்றுவதால் நியூசிலாந்தில் புகைப்பிடிப்போரின் சதவீதம் ஐந்திற்கும் கம்மியாக குறைய வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நியூசிலாந்தில் 11.6 சதவீதம் மக்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டு முதல் புகையில்லா தலைமுறைகளை உருவாக்க தொடர்ந்து நியூசிலாந்து அரசு பாடுபடும் எனவும் அவர் கூறுகிறார். உலகெங்கிலும் உள்ள சுகாதார ஆர்வலர்கள் நியூசிலாந்து அரசின் இந்த புதிய சட்டத்திற்கு தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து பல இளைஞர்கள் காப்பாற்றப்படுவர் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.