• October 7, 2024

பூஜை போட்டு செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் !!!

 பூஜை போட்டு செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் !!!

வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளை மனிதர்களைப்போல மதித்து பாசம் காட்டும் எத்தனையோ மனிதர்களை பார்த்திருப்போம். தனது செல்ல நாயின் பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை நடத்தி வாழ்த்து தெரிவித்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் Sofa-வில் அழகாக படுத்திருக்கும் நாய்க்கு பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி ஆரத்தி காண்பித்து, வாழ்த்து மந்திரங்களை ஓதி பிறந்தநாள் வாழ்த்துக்களை அந்த நாயை வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாயின் பெயர் கோபி என்றும் வளர்ப்பவரின் பெயர் சுதா மூர்த்தி என்றும் டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Dogs look like their owners – it's a scientific fact - BBC Future

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து comment-களை பதிவிட்டுள்ளனர். தன் பிறந்தநாளுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜையை sofa-வில் அமர்ந்தவாறு அழகாக இந்த செல்ல கோபி நாய் பார்த்துக் கொண்டே இருக்கிறது. இந்த நாயை வளர்க்கும் சுதா மூர்த்தி என்பவர் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாய் மீது எந்த அளவிற்கு பாசம் இருந்தால் அந்த நாயின் பிறந்தநாளை இவ்வளவு விமர்சையாக கொண்டாடுவர் என நம்மை இந்த வீடியோ சிந்திக்க வைக்கிறது. அன்பு எனும் ஒற்றை மொழி கொண்டு இனங்களை தாண்டியும் பாசத்தை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

செல்ல நாய் கோபியின் பிறந்தநாள் பூஜை வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.