• April 12, 2024

ஒரு நாள் போட்டிகளுக்கும் கேப்டன் ஆனார் ரோஹித் ஷர்மா !!!

 ஒரு நாள் போட்டிகளுக்கும் கேப்டன் ஆனார் ரோஹித் ஷர்மா !!!

டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். தற்போது ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.


இனி வரும் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து ரோஹித் சர்மாவுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். ரோஹித் ஷர்மா கேப்டனாக 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image

இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாக இருந்த விராட் கோலி 65 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி கேப்டனாக செயல்பட்ட 19 ஒருநாள் தொடர்களில் இந்தியா 15 தொடர்களில் வெற்றிவாகை சூடி இருக்கிறது.


இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலியின் இந்த கேப்டன்சி விலகல் முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கோலி கேப்டனாக இருந்த காலங்களில் இந்தியா எந்த ஒரு முக்கிய கோப்பையையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Image

பிசிசிஐ ரோஹித் சர்மாவை கேப்டனாக அறிவித்ததில் இருந்து விராட் கோலி இந்திய கேப்டனாக நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூறி விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நன்றி தெரிவித்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியே கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக பதவி ஏற்றுள்ள ரோஹித் சர்மா அவர்களுக்கு deep talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரோஹித் சர்மாவை இனிவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக நியமித்து பிசிசிஐ வெளியிட்ட டுவிட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.