• October 5, 2024

”கடலுக்கு அடியில் மூழ்கிய அட்லாண்டிஸ்..!” – வியத்தகு தகவல்கள்..

 ”கடலுக்கு அடியில் மூழ்கிய அட்லாண்டிஸ்..!” – வியத்தகு தகவல்கள்..

Atlantis

நைல் நதி நாகரிகம், மெசப்படோமியா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகங்களுக்கெல்லாம் முந்தைய நாகரிகமாக இந்த அட்லாண்டிஸ் நாகரிகத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு காலத்தில் எப்படி குமரிக்கண்டமானது கடலுக்குள் மூழ்கி விட்டது என்று கூறினோமோ, அதுபோலவே மற்றொரு நகரான அட்லாண்டிஸ் பல மீட்டர்கள் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கக்கூடிய நாகரீகமான மக்கள் வாழ்ந்த இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா.

Atlantis
Atlantis

இந்த மூழ்கிய பகுதியில் பழங்காலத்து பிரமிடுகள் மட்டுமல்லாமல் புரியாத புதிராக இருக்கக்கூடிய எண்ணற்ற கட்டிட இடுப்பாடுகளையும் நாம் கடலுக்கு அடியில் காணலாம்.

இந்த அட்லாண்டிஸ் என்ற புராண கண்டம் கண்டுபிடிக்கப்படவில்லையா? அல்லது அவர்கள் உண்மையில் குடியேறிய நிலப்பரப்பிற்கான ஆதாரங்கள் என்னென்ன உள்ளது என்பது மூழ்கி இருக்கும் பகுதியில் ஆய்வு செய்வதின் மூலம் கிடைத்துள்ளது.

கிரேக்க புராணங்களின்படி  கடவுளால் அட்லாண்டிஸ் பாதுகாக்கப்படுகிறது. மேலும்  கடவுள் சில விளக்கப்படாத காரணங்களால் தனது மகன் அட்ராசை இந்த நகரத்திற்கு அரசன் ஆக்குகிறார்.

Atlantis
Atlantis

மேலும் இந்த நகரில் அதிக அளவு தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்பற்ற உலோகங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இங்கு தங்கத்தால் ஆன சுற்று சுவர்க்கம் கொண்ட  இரண்டு ஆலயங்களும் இருந்துள்ளது. இதில் ஒன்று பொஸைடென் (Poseidon god) கடவுளுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் மத்தியில் அட்லாண்டிஸ் அழிவு பற்றி பல்வேறு கதைகள் நிலவுகிறது. சிலர் அணு வெடிப்பை போல 40 மடங்குக்கு சமமான ஒரு பெரிய எரிமலை வெடிப்பால் இந்த நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி போல பெருவெள்ளம் ஏற்பட்டு  மூழ்கி விட்டதாகவும் சிலர் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

Atlantis
Atlantis

ஆனால் புராணங்களின் கூறப்பட்டிருக்கும் கதைகளின் படி வஞ்சகம், லஞ்சம் இவற்றின் வசப்பட்ட அட்லாண்டிஸ் மக்களை எதநியர்கள் தாக்கி வெற்றிகொண்டார்கள்  இந்த நிலையில் கடவுளின் தண்டனையாக அட்லாண்டிக் பெருங்கடலின் பேரலைகள் ஓர் இரவில் இந்த நகரத்தை கடலில் மூழ்கி அடித்து விட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

மிகவும் சக்தி வாய்ந்த மக்களாக திகழ்ந்த அட்லாண்டியர்கள் அவர்கள் ஒழுக்க நெறிமுறைகளை குறைத்ததின் காரணத்தால் ஏனைய தலைமையிலான கூட்டணியில் தோல்வி வரும் முன்னரே அவர்கள் படைகள் ஆப்பிரிக்கா எகிப்து மற்றும் ஐரோப்பாவை கைப்பற்றியது. பின்னர் கடவுளின் தண்டனையின் மூலம் அட்லாண்டிஸ் தீவு எரிமலை சீற்றத்தால் அளிக்கப்பட்டு பூகம்பங்களால் அழிவுற்றது.

இன்னும் இன்று வரை அட்லாண்டிஸ் தேடல்களும் பயணங்களும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது இதற்கான நிரந்தர உண்மை இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.