டைனோசர் இந்தியாவிலும் வாழ்ந்ததா?- புதிய ஆதாரம் என்ன சொல்கிறது..

Dinosaur
இந்த உலகில் மிகப்பெரிய நில வாழ் இனமான டைனோசர் பற்றி திரைப்படங்களில் பார்த்திருப்பதோடு, அதன் பிரம்மாண்ட உருவம் நம்மை ஒரு நிமிடம் பயமுறுத்தக்கூடிய வகையில் இருக்கும். நல்ல வேளை அந்த உயிரினங்கள் இருந்த காலகட்டத்தில் நாம் இல்லை என்பதால் தப்பிப்பிழைத்தோம் என்று மனதில் பலரும் பேசிக் கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த டைனோசர்கள் இந்தியாவிலும் இருந்துள்ளது என்று சொன்னால் உங்களுக்கு மேலும் ஆச்சரியம் வரும். இந்த டைனோசர் பற்றிய அதீத புரிதல் உங்களுக்கு ஜுராசிக் பார்க் படம் பார்த்த பிறகு தான் ஏற்பட்டு இருக்கும்.

தற்போது உலகம் முழுவதும் டைனோசர் பற்றிய கருத்துக்கள் வெகுவாக பரவியுள்ள நிலையில், இது இந்தியாவில் இருந்து உள்ளதற்கான சில தடையங்கள் கிடைத்துள்ளது.
மேலும் உலக நாடுகளில் பல பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சியின் விளைவாக டைனசோரின் படிமங்கள் நமக்கு கிடைத்ததை அடுத்த தான் இது எப்படி இருக்கும் என்ற அடையாளத்தை நாம் அறிந்து கொண்டோம்.
இதனை அடுத்து இந்தியாவில் நடத்தப்பட்ட சில அகழ்வாராய்ச்சிகளில் டைனோசர் இனம் வாழ்ந்ததற்கான புதிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை புவியியல் ஆய்வு மையமும், ஐஐடி ரூகியும் இணைந்து நடத்தி உள்ளது.

இந்த ஆய்வில் மிக நீண்ட கழுத்துடைய தாவரங்களை உண்ணக்கூடிய டைனோசரின் புதை படிவங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்சல் மாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டெடுக்கப்படக்கூடிய முதல் டைனோசர் படிவம்.
மேலும் சயின்டிஃபிக் ரிப்போர்ட் எனப்படும் சர்வதேச பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த புதிய படிமங்கள் 1670 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் உலகில் வேறு எந்த பகுதியிலும் கண்டுபிடிக்கப்படாத புதிய இனமாக இது உள்ளது என கூறப்பட்டுள்ளது.

கூட்டமாக இந்த டைனோசர்கள் வாழ்ந்த அடையாளங்கள் அதில் உள்ளதாகவும், இந்த டைனோசர் இனம் ராஜஸ்தானில் இருக்கும் தார் பாலைவனத்தை தாயகமாக கொண்டு இருக்கலாம். எனவே இதற்கு தாரோசாரஸ் இண்டிகஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது போலவே 164 மில்லியனுக்கு முன்பு இருக்கக்கூடிய பழமையான டைனோசரின் புதை படிவம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அடுத்து உலகிலேயே பழமையான புதை படிவமாக சொல்லப்பட்டு இருந்த அந்தப் படிமம் மாறி, தற்போது இந்தியாவில் 167 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் படிவம் கிடைத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.