• October 3, 2024

கோரக்கர் சித்தரின் ஸ்பெஷல் என்ன? இவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்..

 கோரக்கர் சித்தரின் ஸ்பெஷல் என்ன? இவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்..

Korakkar

குப்பை மேட்டில் போட்ட விபூதியின் மகத்துவத்தால் 9 வயது நிறைந்த சிறுவனாக, அதுவும் தியானம் செய்த கோலத்தில் இருந்த சிறுவன் தான் கோரக்கர். கோரக்கர் மூலிகையால் பிறந்த இவரைத்தான் கோரக்க சித்தர் என்று அழைப்பதாக ஆரூரை கலம்பகம் என்ற பழைய தமிழ் நூல் கூறுகிறது.

மேலும் தனது தாயே தன்னை குப்பை தொட்டியில் போட்டு விட்டதால், இத்துணை நாட்களில் அந்த குப்பைத் தொட்டியில் நாற்றத்தோடு கஷ்டப்பட்ட நான் இனி உன்னோடு இருக்க இஷ்டமில்லை. எனவே இந்த சித்தருடன் எனை அனுப்பிவிடு என்று கூறிய மகனின் பேச்சைக் கேட்டு அந்த சித்தருடன் கோரக்கரை அனுப்பி வைத்தார்.

Korakkar
Korakkar

நாலா திசைகளிலும் தன்னை மறந்து சென்ற கோரக்க படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மனின் தொழிலை தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆழ்ந்த சக்தியை பெறுவதற்காக பிரம்ம முனியுடன் இணைந்து யாகத்தை துவங்கினார்.

இதனை அடுத்து படைக்கும் தொழில் சித்தர்களின் கைக்கு போய்விட்டால் தமக்கு மதிப்பிருக்காது என்று அஞ்சிய தேவர்கள் அக்னியையும், வருணனையும் அனுப்பி யாகத்தை எப்போதும் போல் அழிக்க வேலை செய்தார்கள்.

இதனை அடுத்து அக்னி குண்டத்தில் போட்ட பொருட்கள் இரண்டு பெண்களாக மாறி இரண்டு முனிவர்களையும் சுற்றி சுற்றி வந்தது. இருந்தாலும் பிரம்ம முனியும், கோரக்கரும் எங்கள் யாகத்தை அழிப்பதற்காக நீங்கள் பெண்களாக வந்தீர்களா? என்று கூறி நீரை தெளித்து அவர்களை செடிகளாக மாற்றி விட்டார்கள்.

Korakkar
Korakkar

அந்த செடிகள் தான் காயகல்ப செடிகள் என்று அழைக்கப்படுகிறது. மேலும் அதிக அளவு கோபம் கொண்ட சித்தர்கள் தங்கள் பலத்தை இழந்த காரணத்தால் படைக்கும் தொழிலை செய்யக்கூடிய வித்தையை கற்றுக் கொள்ள முடியாமல் போனது.

 இதனை அடுத்து சிவபெருமானின் கட்டளைக்கு இணங்க காயகல்பத்தை கொண்டு உலக உயிர்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கான மருந்தை தயாரிக்க கூடிய பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

அந்த வகையில் இந்த இரு சித்தர்களுமே சதுரகிரிக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் உள்ளது. மேலும் சித்து வேலைகள் செய்து பல மக்களுக்கு வாழ்வளித்த கோரக்கர், பேரூரில் சித்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

Korakkar
Korakkar

 மேலும் கார்த்திகை மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்த கோரக்கர் சுமார் 880 ஆண்டுகளும் 11 நாட்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

18 சித்தர்களில் 16வது இடத்தில் இருக்கக்கூடிய இவர் கிபி 1233 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் இருக்கும், வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் பட்டினத்தார் காலத்திற்குப் பிறகும் வாழ்ந்து இருக்கிறார்.

இவர் எழுதிய நூல்களில் மிகச் சிறப்பானதாக கோரக்கர் சந்திரரேகை, கோரக்கர் நம நாசத் திறவுகோல், ரச மணிமேகலை போன்றவை முக்கியமான நூல்களாக கருதப்படுகிறது.