• October 3, 2024

அஸ்வமேத யாகத்தில் பலியிடப்பட்ட குதிரை படைவீரர்களுக்கு புலால் உணவானதா? – உண்மை என்ன?

 அஸ்வமேத யாகத்தில் பலியிடப்பட்ட குதிரை படைவீரர்களுக்கு புலால் உணவானதா? – உண்மை என்ன?

Ashvamedha

பண்டைய காலத்தில் வாழ்ந்து வந்த நமது முன்னோர்கள் புலால் உணவை உண்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை வைக்கும் போது இந்து மதத்தை கடைபிடித்து வந்த அவர்கள் புலால் உணவு எடுத்துக் கொண்டு இருப்பதைப் பற்றியும், அதற்காக அவர்கள் கடவுளுக்கு பலியிட்ட விலங்குகளை தான் அப்படி உணவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

சில சம்பிரதாய சடங்குகளுக்காக இந்து மதத்தில் விலங்குகளை பலியிடுவது என்பது தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வாகவே உள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட அஸ்வ மேத யாகம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Ashvamedha
Ashvamedha

இந்த யாகத்தில் அசுவம் என்பது குதிரையை குறிக்கும். எனவே தான் குதிரைகளை பலியிட்டு தான் இந்த யாகமானது அன்று செய்யப்பட்டுள்ளது. அப்படி பலி கொடுத்த குதிரைகளை படை வீரர்களுக்கு உணவாக கொடுத்திருக்கிறார்கள்.

ஏனெனில் படை வீரர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அதிகளவு சத்தை கொடுக்க கூடிய தேவை மிக முக்கியமாக கருதப்பட்டதால், இந்த குதிரையை கடவுளுக்கு பலியிட்ட பிறகு அவர்களுக்கு உணவாக தந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து அந்த காலகட்டத்திலேயே புலால் உணவு உண்ணப்பட்டு உள்ளது என்ற தகவல் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. சத்திரியர்களுக்கும், படை வீரர்களுக்கும் அதிக அளவு புரோட்டீன் சத்து தேவைப்பட்டு இருந்த காரணத்தினால் அவர்கள் இந்த உணவை உண்டுயிருக்கலாம்.

Ashvamedha
Ashvamedha

அது மட்டுமல்லாமல் போர் வீரர்களாக இல்லாதவர்கள் யாரும் உயர்ந்த புலால் உணவை உண்ணவில்லை. படைகளை நடத்திச் செல்லக் கூடியவர்கள், படைவீரர்கள் போன்றோர் புலால் உணவை உண்டதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளதால் இந்து மதத்தை பொறுத்தவரை அவரவர் செய்யும் தொழிலை பொறுத்தே அவர்களது உணவு முறையும் அமைந்திருந்தது என கூறலாம்.

இதனை அடுத்து இந்து சமயத்தை பொறுத்தவரை இந்த வகை உணவை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்தவிதமான கட்டாயங்களையும் அவர்கள் வலியுறுத்தவில்லை. பலவித தன்மைகள் இருக்கக்கூடிய கருத்துக்களை ஒருங்கிணைத்தது தான் இந்து மதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Ashvamedha
Ashvamedha

இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறோம். உங்களது உணர்வுகளுக்கு எது சரி என்று படுகிறதோ, அதுவே சரியான பதிலாக இருக்கும் என்று கூறலாம்.

இது போன்ற வேறு ஏதேனும் கருத்துக்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றை மறக்காமல் கட்டாயம் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.