• October 5, 2024

அட.. அது என்ன? யோகி.. போகி.. ரோகி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்..

 அட.. அது என்ன? யோகி.. போகி.. ரோகி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்..

siddhar

ஐம்புலன்களையும் அடக்கி தெய்வ நிலையை எட்டியவர்களை சித்தர்கள் என்று கூறலாம். இந்த சித்தர்கள் மனிதகுலம் செழித்து வளர எண்ணற்ற நன்மைகளையும், வழிமுறைகளையும் வகுத்து தந்ததோடு சித்த மருத்துவத்தையும் விட்டுச் சென்றவர்கள்.

இந்த சித்தர்களின் கருத்துப்படி யார் யோகி யார்? போகி யார்? ரோகி யார்? என்பதை விரிவாக தெரிந்து கொள்ளும்போது நம் வாழ்க்கையில் நூறாண்டு ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

siddhar
siddhar

இந்த மூன்று வார்த்தைகளும் உணவை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்ட வார்த்தைகள் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நினைக்கலாம் யோகியா வதற்கும் உண்பதற்கும் என்ன சம்பந்தம். ஏன் யோகி என்ற வார்த்தையை போட்டு இருக்கிறார்கள். இந்த உணவை வைத்தா யோகியை அளப்பதும் என்பது போன்ற கருத்துக்கள் உங்களுக்குள் உதயமாகலாம்.

ஆனால் முக்காலத்திலும் வாழ நினைப்பவன் ரோகி என்று அழைக்கப்படுகிறார். இரு காலத்தில் வாழ்பவன் போகி என்றும் நிகழ்காலத்தில் இருப்பவன் யோகி என்றும் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் மூன்று வேளை உணவு உண்பவன் ரோகியாக மாறிவிடுகிறார். அதாவது அவனுக்கு நோய்களின் தாக்கம் அதிக அளவு விரைவில் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

siddhar
siddhar

இரண்டாவதாக கூறப்பட்ட சொல் போகி. இவர்கள் ஒரு நாளில் இரண்டு வேளை மட்டுமே உண்பவர்கள். அதனால் ஓரளவு ஆரோக்கியமான சூழ்நிலையில் சிறந்த மனநிலையில் இருப்பார்கள்.

முதலாவதாக கூறப்பட்ட சொல் யோகி இவர் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவை உட்கொள்பவர்களாக இருக்கிறார்கள். எனவே தான் இறப்பு என்ற நிலையை தவிர்த்து எதிர்காலம் என்று எதையும் நினைக்காத காலத்தில் இருப்பவனை யோகி என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

siddhar
siddhar

இந்த யோகிகள் தான் உணவை உண்ணாமல் செரிப்பவர்கள், தூங்காமல் களைப்பை தீர்த்துக் கொள்பவர்கள், புணராமல் சந்ததியை வளர்ப்பவர்கள் என கூறலாம்.

எனவே உயிர் வாழ்வதற்கும் நம்மை கடவுள் நிலைக்கு உயர்த்துவதற்கும் ஒரு வேளை உணவே போதுமானது. மேலும் நாம் தொலைத்து இருக்கும் வாழ்வை சிறந்த முறையில் மாற்றுவதற்கு மேற்கூறிய உணவு முறையை சித்தர்கள் கூறியபடி நாம் கடைப்பிடித்து வந்தால் 100 ஆண்டுகள் எந்த நோய்களின் தாக்குதலும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.