• July 27, 2024

என்ன சொல்றீங்க.. மும்பை ஏழு தீவா இருந்ததா? – மலைக்க வைக்கும் விறுவிறு வரலாறு..

 என்ன சொல்றீங்க.. மும்பை ஏழு தீவா இருந்ததா? – மலைக்க வைக்கும் விறுவிறு வரலாறு..

Mumbai

இந்திய பொருளாதாரத்தில் தற்போது முக்கிய இடத்தை பிடித்திருக்கும் மும்பை, முன்பு 7 தீவுகளின் தொகுப்பாக இருந்தது என்றால் அது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் ஆச்சரியத்தையும் தூண்டிவிடும்.

ஆம்.. மும்பை பம்பாய் தீவு, பரேல், மசகான், மாஹிம், கொலாபா, வொர்லி மற்றும் ஓல்ட் வுமன்ஸ் தீவு ஆகிய ஏழு தீவுகளை உள் அடக்கிய பகுதி தான் இன்று மும்பை நகரமாக உருமாறி உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Mumbai
Mumbai

இந்த தீவுகளில் மீனை பிடிக்கக்கூடிய சமூகத்தைச் சார்ந்த பல்வேறு மக்கள் வசித்து வந்து இருக்கிறார்கள். இவர்கள் இடையே தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இருந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் போர்த்துக்கீசியர்கள் பம்பாய் தீவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இவை வரலாற்றில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் அவர்கள் தங்களது கட்டுப்பாட்டை விரிவு படுத்த மும்பையை மையமாக பயன்படுத்தினார்கள்.

இதனை அடுத்து அவர்கள் பம்பாய் தீவில் குடியேறிய பிறகு அங்கு வர்த்தக நிலையம், கோட்டைகள் போன்ற பல்வேறு குடியிருப்புகளை உருவாக்கின. மேலும் மும்பையில் ஒரு மிகப்பெரிய துறைமுகத்தையும் நிறுவினர்.

Mumbai
Mumbai

போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை அவர்களை அடுத்து வந்த அரசர்களின் கையில் சென்று மிகப் பெரிய மாற்றங்களை ஒவ்வொரு நாளும் சந்தித்தது.

இதனை அடுத்து மும்பையானது பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய ஒரு மிகப்பெரிய நகரமாக வளர்ந்தது. எனினும் இங்கு இருக்கும் ஏழு தீவுகள் தான் மும்பை என உருமாறிய கதை பலருக்கும் தெரியாது.

இதன் பின் படிப்படியாக இங்கிருக்கும் பகுதிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய நகராக மாறிய போது  90களின் பிற்பகுதியில் மராட்டி கலாச்சார பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு பம்பாயை, மும்பை என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

Mumbai
Mumbai

மும்பை என்ற பெயர் ஹோலி சமூகத்தின் புரவலர் இந்து தெய்வமான மும்பா தேவி என்ற பெயரில் இருந்து தான் உருவானது. தாய் என்று பொருள் தரக்கூடிய இந்த பெயரில் ஐ என்ற வார்த்தையை சேர்த்து மும்பை என்று அழைத்தார்கள்.

இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் ஏழு தீவுகளாக இருந்த பம்பாய் தீவுகள் எப்படி மும்பை நகராக மாறியது என்று. இன்றும் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் மும்பை இந்தியாவின் ஒரு மிகப்பெரிய பொருளாதாரச் சந்தை என்பதை அனைவரும் உணர்ந்துள்ளார்கள்.