• July 27, 2024

ஆப்கானிய படையை ஓட.. ஓட.. விரட்டி அடித்த நாகா சாதுக்கள் – இப்படி நடந்ததா?

 ஆப்கானிய படையை ஓட.. ஓட.. விரட்டி அடித்த நாகா சாதுக்கள் – இப்படி நடந்ததா?

1757 ஆம் ஆண்டு வெறும் 3000 நாக சாதுக்கள் ஆப்கானிய படையை ஓட.. ஓட.. விரட்டி அடித்தார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

 

அதற்கு முன்னால் யார் இந்த நாக சாதுக்கள்? எங்கிருக்கிறார்கள்..  இவர்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது, என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும்.

 

இதற்கான விடை.. இந்த நாக சாதுக்கள் பண்டைய இந்து கோயில்களை படை எடுக்கக்கூடிய மன்னர்களில் இருந்து பாதுகாத்தவர்கள். இந்த நாக சாதுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், அவர்களை மிகச் சிறந்த ஞானிகள் என்று கூறலாம்.

சாதாரண மனிதனாகப் பிறந்து இவர்கள் எப்படி நாக சாதுவாக மாறுகிறார்கள் இந்த நாக நிலையை அடைய அவர்கள் எத்தகைய தியாகத்தை செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

எல்லோரும் அவ்வளவு எளிதில் நாகசாதுக்களாக மாற முடியாது. நாக சாதுக்களாக மாற அவர்களுக்குள் ஒரு வலுவான அர்ப்பணிப்பு தன்மை இருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் கடுமையான பயிற்சிகள் மூலமே அவர்கள் அந்தஸ்தை அடைய முடியும்.

 

இந்த நாகசாதுகளுக்கு பண்டைய காலத்தில் மிகக் கடுமையான போரை எதிர்த்து போராடக்கூடிய குணங்களை கற்றுக் கொடுத்தார்கள். இவர்களுக்கு திரிசூலங்கள், கடாக்கல், திரி தனுஷ் மற்றும் கணிதம் போன்றவற்றை பயன்படுத்த கற்றுக் கொடுத்திருந்தார்கள்.

 

குறிப்பாக இந்த நாக சாதுக்கள் மொகலாயப் படையெடுப்பிலிருந்து நமது கோவில்களையும், அதன் கட்டமைப்புகளையும் பாதுகாத்து இருக்கிறார்கள். 16 வயது முதல் 18 வயது வரை இருக்கக்கூடிய இளைஞர்கள் தான் இந்த நாக சாதுவாக மாற முடியும்.

பொதுவாக இந்த நாக சாதுக்கள் யாரும் உடைகளை அணிந்திருக்க மாட்டார்கள். உடல் முழுவதும் சாம்பலை பூசிக் கொள்வார்கள். இவர்கள் கழுத்தில் ஒரு ருத்ராட்ச மாலை மட்டும் அணிந்து கொள்வார்கள். ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே உணவை சாப்பிடுவார்கள்.

 

ஆதிசங்கரர் சாதன தர்மத்தை காப்பதற்காக நாக சாதுக்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினார்., இதற்கு காரணம் அந்த சமயத்தில் ஏற்பட்ட மிலேச்சர்களின் படையெடுப்பு தான். அப்போது இந்து கோவில்களின் மீது தாக்குதல் நடத்துபவர்களின் மீது கருணை காட்டக் கூடாது என்று ஆதிசங்கரர் இவர்களுக்கு தெளிவாக வலியுறுத்தி இருக்கிறார்.

இந்தப் படையெடுப்புக்கு காரணமே, அவர்கள் நமது வேத கலாச்சாரத்தின் மதிப்புகளை இழிவு படுத்துவதும், சிதைப்பதும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். இதனால் பல இந்து மன்னர்கள் கூட போர்காலங்களில் முஸ்லிம்களுடன் போரிடுவதற்கு இவர்களின் உதவியை பெற்றார்கள். மேலும் இந்து அரசர்களுக்காக இவர்கள் போரில் ஈடுபட்டு பல வெற்றியடைந்த சம்பவங்களும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

 

இதனை அடுத்து அகமத்சா ஆஃப்தலி கோகுலத்தையும் நாகசாதுக்களையும் அவர்களின் பாதுகாப்பு இருந்த கோகுலத்தை தாக்கிய போது வீரத்தோடு அந்த ஆப்கானியர்களை எதிர்கொண்டு “ஹர ஹர மஹாதேவா” என்ற மந்திரத்தை உச்சரித்து அவர்களை ஓட.. ஓட விரட்டி கொன்றதை இன்றும் சரித்திரம் பேசுகிறது.

 

மேலும் ஆப்கானிய படை இந்த நாக சாதுக்களை குறைத்து மதிப்பிட்டதன் காரணத்தால் தான் மண்ணைக் கவ்வியது என்று கூறலாம்.