• July 27, 2024

“ஆடி வெள்ளி முதல் நாள்..!” – சகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி பண்ணுங்க..

 “ஆடி வெள்ளி முதல் நாள்..!” – சகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி பண்ணுங்க..

Aadi Velli

தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு என்று தனி சிறப்பு உள்ளது. இதற்கு காரணம் சூரியன் கடகத்தில் இருந்து சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் அம்மனை வழிபடுவதன் மூலம் கோடி கோடியாய் நல்ல பலன்கள் கிடைக்கும். தட்சணாயன புண்ணிய காலமான இந்த ஆடி மாதம் பிறந்த பின்பு தான் பல பண்டிகைகளும் தொடர்ந்து வரும்.

 

ஆடி பதினெட்டு பண்டிகை படு விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகின்ற நிகழ்வாக உள்ளது.

 

எனவே ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த மாதத்தில் நீங்கள் அம்பாளை வணங்கும் போது உங்களுக்கு தேவையான செல்வ வளம் உங்களை தேடி வரும்.

Aadi Velli
Aadi Velli

ஆடி மாதத்தை பொருத்தவரை கோயில்களில் 30 நாளும் விசேஷ பூஜைகள் நடைபெறுவதோடு, கூழ் ஊற்றும் நிகழ்வும் தமிழகம் எங்கும் உள்ள கோயில்களில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

 

ஆடி மாத வெள்ளியைப் போலவே, ஆடி செவ்வாய், ஞாயிற்றுக்கிழமையும் அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

 

இந்த நாளில் அம்மனுக்கு உங்கள் வீட்டில் நீங்கள் சிறப்பு வழிபாடு செய்வதின் மூலம் எண்ணற்ற பலன்களை அடையலாம். இந்த மாதத்தில் சிவனை விட அம்பாளின் சக்தி அதிகமாக இருக்கும், என்பதால் தான் இதை அம்மனுக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.

 

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யலாம். மேலும் அம்மனுடைய மந்திரத்தையும் நீங்கள் உச்சரித்து, உரக்கச் சொல்லுவதின் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்மை கிடைக்கும்.

 

பெண்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வது, தர்மங்கள் செய்வது, மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வரலட்சுமி பூஜை,  சுமங்கலி பூஜையை நீங்கள் செய்வதின் மூலம் மேலும் சுபிட்சம் ஏற்படும் என்பது ஐதீகமாக உள்ளது.

Aadi Velli
Aadi Velli

ஆடி வெள்ளிகளில் அம்மனை வழிபடுவதின் மூலம் தடையாக இருக்கும் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். அது போல நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிள்ளை பேறு கிட்டும். நல்ல அறிவாற்றலோடு பிள்ளைகள் விளங்க ஆடி வெள்ளியில் விரதம் இருந்து பூஜை செய்யலாம்.

இந்நாளில் அம்மனுக்கு பிடித்த பால் பாயாசம், சர்க்கரை பொங்கல், சுண்டல், வடை என பல பொருட்களை அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்து அம்மனின் அருளை பெறலாம். மேலும் முடியாதவர்களுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பாக கூறப்பட்டுள்ளது

 

மேலும் இந்த மாதத்தில் வயதுக்கு வராத கன்னியா குழந்தைகளுக்கு, ஜாக்கெட், தாம்பூலம், சீப்பு கண்ணாடி வளையல், கண்ணாடி போன்றவற்றை கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

Aadi Velli
Aadi Velli

எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனி சிறப்பு இருப்பதால்தான் அன்றைய தினத்தில் கோயில்களில் இருக்கும் அம்மனுக்கு சந்தன காப்பு சாற்றப்படுகிறது. இதனை தான் கோடி நன்மையை அள்ளித்தரும் ஆடி வெள்ளி என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

எனவே ஆடி வெள்ளியை உங்கள் வீடுகளில் சிறப்பாக கொண்டாட நீங்களும் முயற்சி செய்வதோடு அதற்குரிய பலனையும் அடைய ஆடி வெள்ளி விரதத்தையும், பூஜையையும் உங்கள் வீடுகளில் செய்யலாமே.