யாரும் எளிதில் உள்ளே நுழைய முடியாத செஞ்சிக்கோட்டை..! – மலைக்க வைக்கும் உண்மைகள்..
கி.மு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஜைனர்கள் வாழ்ந்ததாக கருதப்படுகின்ற இந்த செஞ்சி பகுதியில் பல்லவர் காலத்தில் குகை கோயில் கட்டப்பட்டுள்ளது. செஞ்சிக்கு தெற்கு பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது.
பின்னர் கி.பி 580 முதல் 630 வரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. இதனை நீங்கள் தற்போது செஞ்சியின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
871 முதல் 907 வரை இரண்டாம் ஆதித்ய சோழன் செஞ்சியை ஆட்சி செய்திருக்கிறார். அதன் பிறகு இவரது தம்பி ராஜராஜ சோழன் 987 முதல் 2014ஆம் காலம் வரை சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் அரசாட்சி செய்திருந்த, பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு சிறிய கோட்டை இங்கு கட்டப்பட்டது.
காலங்கள் உருண்டோடிய பிறகு செஞ்சியை பாதுகாப்பதற்காக விஜய நகர பேரரசு காலத்தில் 13-ம் நூற்றாண்டில் செஞ்சி விரிவாக்கப்பட்டது. இதை அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சி கோட்டையை வலிமையான கோட்டையாக மாற்றினார்கள்.
எனினும் கிபி 127-இல் மராட்டிய மன்னன் இந்த கோட்டையை கைப்பற்றினார்கள். அதுமட்டுமல்லாமல் சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் செஞ்சிக்கோட்டைக்கு தப்பி வந்து அங்கிருந்துதான் முகலாயர்களோடு போர் தொடுத்தான்.
இந்த கோட்டையை சுற்றி வளைத்த முகலாயர்கள் ஏழு வருடங்களாக இந்த கோட்டையை நெருங்க முடியாமல் திணறி வந்தார்கள். கடைசியாக 1298 ஆம் ஆண்டு இந்தக் கோட்டை முகலாயர்களால் கைப்பற்றப்பட்ட போதும் சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனை அடுத்து இந்த கோட்டையானது கர்நாடக நவாபுகளின் கைக்கு சென்றது. இவர்களைத் தொடர்ந்து 1750 இல் பிரஞ்சு காரர்கள் இக்கோட்டையை கைப்பற்றினார்கள். கடைசியாக 1761 ஆங்கிலேயர்கள் இக்கோட்டையை கைப்பற்றி விட்டனர்.
செஞ்சிக்கோட்டையை பொறுத்தவரை அந்த கோட்டையில் கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படை வீரர்கள் தங்க பல பகுதிகள், உணவுக்காக சேமிக்கப்பட்ட நெல் களஞ்சியங்கள், எதிரிகள் எளிதில் உள்ளே வர முடியாத அளவுக்கு ஆழமான அகழிகள் போன்றவை உள்ளது.
இந்த செஞ்சி கோட்டையானது மூன்று குன்றுகளை இணைக்கக்கூடிய சுவர்களை உள்ளடக்கி இருப்பதால் சுமார் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. மேலும் 240 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கோட்டை 24 மீட்டர் அகலமுள்ள அகழியால் பாதுகாக்கப்பட்டது.
மேலும் இயற்கை அரணாக இந்த கோட்டையை கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி போன்ற குன்றுகள் இருந்தது. இந்தக் குன்றுகளுக்கு இடையே தான் 20 மீட்டர் அகலம் கொண்ட சுவர்கள் எழுப்பப்பட்டு பிரம்மாண்டமான தோற்றத்தில் செஞ்சிக்கோட்டை காட்சியளித்தது.
இந்திய வரலாற்றில் மிகச்சிறப்பான கோட்டையாக கருதப்படக் கூடிய இந்த கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது மிகச்சிறந்த சுற்றுலா தளமாக இன்று விளங்குகிறது.