• December 4, 2024

“அறிவில் சிறந்த அவ்வையாரின் சிறந்த படைப்புகள்..!” – சிறுவர் முதல் பெரியவர் வரை..!

 “அறிவில் சிறந்த அவ்வையாரின் சிறந்த படைப்புகள்..!” – சிறுவர் முதல் பெரியவர் வரை..!

Avvaiyar

தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் அவ்வை பாட்டியை பற்றி கட்டாயம் அறிந்திருப்பார்கள் என்று கூறும் அளவிற்கு அறிவில் மிகச் சிறந்த அவ்வையார் பாடிய பாடல்களைப் படித்து தான் வளர்ந்து இருப்போம்.

 

அந்த வகையில் அவ்வையாரும் சிறுவர்களை நல்வழிப்படுத்தக்கூடிய மிக எளிமையான பாடல்களை தந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பாடல் வரிகளில் நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் சிறு குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கொண்டவர்.

Avvaiyar
Avvaiyar

மாணவர்களுக்காக இயற்றப்பட்ட ஆத்திச்சூடி 108 பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் மனித வாழ்க்கையில் ஏற்றம் பெற்று வாழ்வதற்கான வழிகளை நீதி நெறிகளை கற்றுத் தருகிறது.

 

வயது முதிர்ந்த குழந்தைகள் கொன்றை வேந்தனை படித்தால் போதும், நிச்சயம் மன மகிழ்ச்சியோடு இருப்பது மட்டுமல்லாமல் அவர்களது அறிவும் விலாசமாகும். எளிமையான இனிமையான பாடல்களை அவ்வை  நமக்காக தந்திருக்கிறார்.மேலும் அரிய வகை கருத்துக்களையும், நீதிகளையும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Avvaiyar
Avvaiyar

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் நல்வழி என்ற நூலில் சிவபெருமான் பற்றிய குறிப்புகளும், திருநீரின் சிறப்பும் மிகத் தெளிவான முறையில் கூறப்பட்டுள்ளது. அவ்வையார் தனது பாடல்களில் சமயம் பற்றி கூறுவதோடு நின்று விடாமல் சில தத்துவ கருத்துக்களையும் தெரிவித்திருப்பது தான் சிறப்பான விஷயமாக நாம் கூறலாம்.

 

அப்படிப்பட்ட பெண் புலவரான அவ்வையார் கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவராக வரலாறு சொல்கிறது.

 

இவர் இயற்றிய விநாயகர் அகவல், ஞானக்குறள், ஆசாதி கோவை ஆகியவை மிகப் பிரபலமான நூலாக இன்று வரை திகழ்கிறது. ஒவ்வொரு மக்களும் தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நல்ல ஒழுக்கங்கள் நிறைந்த 40 பாடல்களை இவர் நல்வழி நூலில் தந்து இருக்கிறார்.

Avvaiyar
Avvaiyar

மேலும் மூதுரை என்ற நூலில் 30 பாடல்கள் உள்ளது. அதில் வாக்குண்டாம் என்ற கடவுள் வணக்கத்துடன் துவங்கும் பாடல் படிக்கும் போதே நமக்கு பக்தியை ஏற்படுத்திவிடும்.

 

அவ்வையார் எழுதிய பாடல் வரிகளில் அறம் செய்ய விரும்பு ,இளமையில் கல், சேரிடம் சேர்ந்து சேர், அறம் அல்லது நல்லறம் நன்று, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை போன்ற தொடர்கள் உலகம் உய்யும் வரை அனைவருக்கும் பொருந்தக்கூடிய வரிகளாக இருக்கும். இந்த வரிகளை பின்பற்றி வாழ்வதின் மூலம் வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழலாம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

இந்தப் பெண்பால் புலவர் நீண்ட நாள் உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதிகமான ஔவைக்கு நெல்லிக்கனியை ஏன் பரிசாகத் தந்தார் என்பது இதன் மூலம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.