• March 29, 2024

பெண்களை பெருமைப்படுத்திய OLA நிறுவனம் !!!

 பெண்களை பெருமைப்படுத்திய OLA நிறுவனம் !!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் எல்லா துறைகளிலும் சாதிக்க தொடங்கிவிட்டனர். பெண்களை போற்றும் வகையில் OLA நிறுவனம் ஒரு பாராட்டுக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


சமீபத்தில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் 2,400 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

Ola receives 1 lakh bookings for electric scooter in a day: Here's how you  can reserve one

இந்நிலையில் பத்தாயிரம் பெண் தொழிலாளர்களை மட்டுமே கொண்டு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் ஆலையானது இயங்கும் என ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனரான பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.


இவரின் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் அவர், “பெண்களுக்கு நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு கொடுப்பதன் மூலம் இந்தியாவின் வருமானமானது 27 சதவீதம் அதிகரிக்கும்.”, எனவும் குறிப்பிட்டுள்ளார்.

85% Indian women miss pay raise or promotion due to gender: LinkedIn report  | Jobs News,The Indian Express

பெண்கள் மட்டும் வேலை செய்யும் இந்த தொழிற்சாலை ஆனது நடைமுறைக்கு வந்தால் உலகிலேயே அதிக பெண்கள் வேலை செய்யும் இடமாக இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. நாடெங்கிலும் உள்ள மக்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஓலா நிறுவனத்தின் இந்த முடிவுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

The Turning Point] Ola's ride from a tour and travel operator to a  ride-hailing unicorn
Bavish Aggarwal

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெண்களும் பெரும் பங்கு வகிப்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.


பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் பெண்களை கொண்டு தொழிற்சாலையை இயக்கவிருக்கும் ஓலா நிறுவனத்திற்கும் அதன் இணை நிறுவனரான பாவிஷ் அகர்வாலுக்கும் Deep Talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.