• October 3, 2024

Photographer-க்கு சாப்பாடு கொடுக்காததால் திருமண புகைப்படங்கள் “Delete” !!!

 Photographer-க்கு சாப்பாடு கொடுக்காததால் திருமண புகைப்படங்கள் “Delete” !!!

உணவு அளிக்காததால் திருமணத்தில் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் Delete செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு ரோசமான Photographer. இது குறித்த பதிவை தனது ரெட்டிட் பக்கத்தில் அந்த Photographer-ஏ பதிவு செய்துள்ளார்.

பொதுவாக திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு இந்த புகைப்பட கலைஞர் போட்டோக்கள் எடுத்து கொடுப்பதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலின் பெயரில் ஒரு திருமணத்திற்கு புகைப்படங்கள் எடுக்க ஒப்புக்கொண்ட இவர் மணமக்களை படம் பிடிப்பதற்காக பல இடங்களுக்கு அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்துள்ளார்.

Best Wedding Photographers in Chennai, Photography Price & Info | Sulekha

காலை 11 மணி முதல் இரவு 7:30 மணி வரை வெவ்வேறு இடங்களில் மணமக்களை படம்பிடித்த இவருக்கு அவர்கள் உணவளிக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயமே.

காலை முதல் பட்டினி கிடந்து கடுப்பான photographer தனது கோபத்தை வெளிப்படுத்த ஒரு சிறப்பான வழியை தேர்ந்தெடுத்தார். சரியாக உபசரிக்காத காரணத்தினால் மணமக்களின் அனைத்து போட்டோக்களையும் இந்த Photographer delete செய்து விட்டு, “உணவு அளிக்காததால் தான் நான் இதை டெலீட் செய்தேன்.”, எனவும் ரெட்டிட் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Delete it right before you recycle - Telegraph India

இவர் வெளியிட்ட பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இவருக்கு உணவு அளிக்காத மணமக்களின் தவறை சுட்டிக் காட்டியும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்பட கலைஞர் வெளியிட்ட ரெட்டிட் பதிவை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.