வருகிறது ரோல்ஸ் ராய்ஸ்-ன் எலக்ட்ரிக் கார் !!!

தங்களின் 117 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தங்களது முதல் எலக்ட்ரிக் காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை குறித்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் CEO Torsten Muller வெளியிட்டார்.
இந்த காரின் மாதிரி புகைப்படங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பான தோற்றத்துடன் இந்த கார் காட்சியளிக்கிறது.

இந்த கார் 2023-ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த காரை குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்து உலகெங்கிலுமுள்ள ரோல்ஸ் ராய்ஸ் ரசிகர்கள் இந்த அறிவிப்பை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வெளியிடப்பட்ட காரின் புகைப்படத்தில் சில எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இவை அனைத்தும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சார்லஸ் ரோல்ஸ் 1900ம் ஆண்டு ஒரு மேடையில் பேசிய கருத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரை இயக்கும்போது துளியளவும் சத்தம் வெளிவராது என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கார் விற்பனைக்கு வருவதற்குள் இந்த காரை சார்ஜ் ஏற்றிக் கொள்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஆங்காங்கே அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
சமீப காலங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் நடைமுறைக்கு வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவது ஆட்டோமொபைல் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
Style-ஆன ரோல்ஸ் ராய்ஸ் எலக்ட்ரிக் காரின் மாதிரி புகைப்படங்களை கீழே காணுங்கள்.



இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.