• March 29, 2024

இந்திய சிங்கப்பெண்ணின் புகழ் பாடும் Google !!!

 இந்திய சிங்கப்பெண்ணின் புகழ் பாடும் Google !!!

இந்தியாவின் முதல் பெண் விமானியான சரளா தாக்ரல் அவர்களின் 107வது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் கூகுள் நிறுவனம் தனது Doodle-ஐ மாற்றி அமைத்துள்ளது.



1914 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு டெல்லியில் பிறந்து லாகூரில் வளர்ந்தவர் சரளா தாக்ரல். விமானியான தனது கணவரை முன்னுதாரணமாகக் கொண்டு தானும் ஒரு விமானியாக உருவெடுக்க வேண்டும் என சரளா நினைத்தார்.

தனக்கு 21 வயது ஆகும்போது முதன்முறையாக ஒரு விமானத்தை சரளா இயக்கினார். தனது முதல் விமானத்தை இயக்கும்போது சரளா இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து விமானத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. சரளா தனது முதல் விமானத்தை இயக்குவதற்கு முன் சரளா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கீழே காணுங்கள்.


சரளா தாக்ரல் - Wikiwand

விமானத்தை இயக்குவதற்கான License-ஐ பெறுவதற்கு முன் சரளா லாகூர் விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று 1000 மணி நேரங்கள் விமானத்தை இயக்கியுள்ளார். இந்தியாவிலேயே 1000 மணி நேரங்கள் விமானத்தை இயக்கிய முதல் பெண்மணி எனும் சாதனையும் சரளாவையே சாரும்.

இரண்டாம் உலகப்போரின் சூழ்நிலைகளால் தொடர்ந்து விமானப் பயிற்சி எடுக்க முடியாமல் போனது. அதன்பின் சரளா கலை மற்றும் ஓவியத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார். தன் பிறந்த ஊரான டெல்லிக்கு மீண்டும் வந்து ஆடைகள் வடிவமைப்பு, ஓவியங்கள் வரைவது போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார் சரளா.

சரளாவின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அவரை ஒரு விமான ஓட்டியாக மாற்றியது. ஒரு இந்தியப் பெண்ணால் விமானியாக உருவெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு அடுத்து வந்த தலைமுறையினருக்கு ஆழமாகப் பதிய வைத்தார்.

Sarla Thukral, First Indian Woman to Pilot an Aircraft Gets a Tribute With  Google Doodle on Her 107th Birthday | ???????? LatestLY

சரளாவின் பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் உருவாக்கியுள்ள இந்த Doodle அவரின் பெருமையை உலகிற்கே எடுத்துச் சொல்லும்.


காலங்கள் கடந்தும் போற்றப்படும் சிங்கப் பெண்ணான சரளா தாக்ரலை அவரது பிறந்த நாளில் நினைவு கொள்வதில் பெருமிதம் கொள்கிறது Deep Talks தமிழ்.