• October 12, 2024

“வீனஸில் உயிரினங்கள் இருக்கா?.. விஞ்ஞானிகள் பிரமிப்பு..!

 “வீனஸில் உயிரினங்கள் இருக்கா?.. விஞ்ஞானிகள் பிரமிப்பு..!

venus

நான் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாய், வேற்று கிரக வாசிகள் பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் சமீபத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சியின் முடிவில் வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான, சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

venus
venus

மேலும் உயிரினங்கள் அங்கு வாழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகளவு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சி கலந்த பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த ஆய்வினை வேல்ஸில் இருக்கக்கூடிய கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த குழுவானது வீனஸ் கிரகத்தில் பாஸ்பீன் வாயு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

 

இந்த பாஸ்பீன் வாயுவின் தன்மை என்னவென்றால், உயிரினங்களில் உடலில் இருந்து வெளிவரக்கூடிய வாயு தான். எனவே அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக கூறியிருப்பதோடு, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அளவைவிட, தற்போது இந்த வாயு ஆழமான பகுதிகளில் அதிகளவு உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

venus
venus

2023 ஆம் ஆண்டில் கார்டிஃப்பில் நடந்த ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டியின் நேஷனல் அஸ்ட்ரானமி, சந்திப்பின்போது கிரீவ்ஸ் என்ற விஞ்ஞானி இந்த வியப்பூட்டும் செய்தியை அனைவரிடமும் கூறினார்.

 

 மேலும் செப்டம்பர் 2020 இல் விஞ்ஞானிகள் குழு ஒன்று வீனஸ் கிரக கிரகத்தில் இருக்கக்கூடிய மேகங்களில் பாஸ்பீன் வாயு உள்ளது என்பதை கண்டுபிடித்தார்கள். இதன் மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்பது உறுதியாகி உள்ளது.

 

பொதுவாகவே ஹைட்ரஜன் வாயு குறைவாக இருக்கும் போது பாஸ்பீன் வாயுவானது உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் அங்கு உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

venus
venus

எனினும் இந்த ஒரு வாயுவை அடிப்படையாகக் கொண்டு, நாம் அங்கு உயிரினங்கள் இருக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது என்று சிலர் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்ற வேளையில், வளிமண்டலத்தில் இருக்கும் பாஸ்பரஸ் பாறைகளின் மீது நீரானது வினைபுரிந்து கூட இந்த வாயு உற்பத்தியாகி இருக்கலாம் என்பதையும் கூறுகிறார்கள்.

 

இதன் மூலம் பூமியிலிருந்து வேறு பகுதிகளில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற கருத்து மீண்டும் ஒரு வலு சேர்ந்து உள்ளது.

 

இதனை அடுத்து விரைவில் அங்கு உயிரினங்கள் உள்ளதா? இல்லையா? என்ற சந்தேகம்  விலகி உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.