
tamil food
தமிழன் பலருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறான். பன்னெடும் காலம் முன்பே நாகரிகத்தின் பிறப்பிடமாக இருந்த தமிழர்கள் அவர்கள் உண்ணும் முறையில் உன்னத சக்தி தரும் உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதை என்றுமே எவராலும் மறக்க முடியாது.
அந்த வகையில் அவன் பாரம்பரிய உணவுகளை விடுத்து அன்னிய மோகத்தால் துரித உணவுக்கு மாறியதன் காரணத்தால் தான் இன்று பல வகையான நோய்களின் தாக்குதலுக்கு உட்பட்டு இருக்கிறான்.
வெள்ளையனின் சதியால் அவன் பயன்படுத்திய தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றைத் தவிர்த்து விட்டு என்று ரீபைன்ட் ஆயிலுக்கு மாறினானோ அன்று அவனுக்கு பிடித்தது சனி என்று சொல்லலாம்.

இந்த காரணத்தினால் தான் தற்போது இளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்கள். தேங்காய் எண்ணெயில் கொழுப்பு இருந்தாலும் அந்த தேங்காய் எண்ணெயை பக்குவமாக பயன்படுத்திய தமிழன் உணவுகளில் கொழுப்புக்களை கரைக்கக்கூடிய சீரகத்தை பெருமளவு சேர்த்து வந்ததின் காரணத்தால், அவனுக்கு கெட்ட கொழுப்பு உடலில் படியாமல் தடுக்கப்பட்டது. ஆனால் இன்று சமையலறைகளில் சீரகத்தின் பயன்பாடு சுருங்கி விட்டது என கூறலாம்.
அது போலத்தான் சனிக்கிழமைகளில் கொள்ளு பருப்பை உணவில் சேர்த்து வந்தான். பொதுவாகவே தமிழர்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே தான் சனி நீராடு என்ற ஒரு பழமொழியும் இருந்தது. எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது உடலானது சூட்டை விடுத்து குளிர்ந்து விடும். இந்த குளிர்ச்சியை ஈடுகட்ட, உடலை சூடாக வைத்துக் கொள்ளவே சூடான பொருளான கொள்ளு பருப்பை அன்று சமைத்து சாப்பிட்டான்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowமேலும் உணவில் அதிகளவு மிளகாயக்கு பதிலாக குறுமிளகை சேர்த்துக் கொண்டதால் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே அவனிடம் அதிகரித்துக் காணப்பட்டது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் முக்கியமாக சில காய்களை குறிப்பாக வாழை இனத்தைச் சேர்ந்த வாழைக்காய், வாழைத்தண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டதின் மூலம் சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருந்தது.

அரிசி உணவுக்கு பதிலாக சிறுதானியங்களை அதிகளவு சேர்த்துக் கொண்டதினால் இரும்பு சத்து அதிக அளவு கிடைத்ததோடு உடல் வலிமையாகவும் இருந்தது. வெள்ளை சர்க்கரையை விடுத்து கருப்பட்டி மூலம் செய்யப்பட்ட இனிப்பு பண்டங்களை சாப்பிட்டதால் சர்க்கரை நோயின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருந்தான்.
ஆனால் இன்று அதையெல்லாம் விடுத்து மைதா, பரோட்டா போன்ற துரித உணவுகளை சாப்பிடுவதின் மூலம் இளம் வயதிலேயே பலவிதமான நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி விட்டான் என்று கூறலாம்.
எனவே நமது பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, பொங்கல், காய்கறிகளை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
All are very superb sir. Keep rocking. Thank you