• July 27, 2024

“தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தேவாலயங்கள்..!” – ஓர் அலசல்..      

 “தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தேவாலயங்கள்..!” – ஓர் அலசல்..      

Church

கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காக கூடுமிடம் தேவாலயம் அல்லது சர்ச் என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் கோயில் மாதா கோயில் என்றும் மக்கள் வழக்கில் கூறப்படுவதுண்டு. பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்கக் கோயில்கள் இயேசுவின் அன்னையாகிய மரியாவின் பெயரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இதற்கு ஒரு காரணம் ஆகும். 

தேவாலயத்தில் தனித்தனி கிறிஸ்தவ சபைக்கு தலைமை தாங்கும் குரு அல்லது சபைத்தலைவர் திருப்பலி நற்கருணை கொண்டாட்டம், விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமய சடங்குகளை முன்னின்று நடத்துகிறார்கள்.  அப்படிப்பட்ட தேவாலயங்களில் சிறப்பு வாய்ந்த தேவாலயங்கள் நமது தமிழகத்தில் என்னென்ன உள்ளது என்று விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

Church
Church

முதலில் சென்னை சாந்தோம் பேராலயத்தை பற்றி பார்ப்போம்.  சாந்தோம் பசிலிக்கா இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இடம்.இது பேராலய வகையைச் சார்ந்த ரோம் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இவ்வாலயம் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை ஆகும்.

 இது பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் அவர்களால் கட்டப்பட்டு, பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானிய குடியேற்ற காலத்தில் விரிவாக்கப்பட்டது. 

இரண்டாவதாக வேளாங்கண்ணி ஆலயத்தை கூறலாம். வேளாங்கண்ணி வங்காளவிரிகுடா கரையில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள புனித பசிலிக்கா  லேடி ஆஃப் ஹெல்த் இந்தியாவில் உள்ள முக்கியமான கிறிஸ்துவ யாத்திரை தலங்களில் ஒன்று.

Church
Church

இது ஜாதி மற்றும் மத பேதமில்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்களை ஈர்க்கிறது. மேலும் அற்புதமான கட்டிட கலை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவதாக தஞ்சாவூரை சுற்றி அமைந்துள்ள தேவாலயங்கள் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் ஆடம்பரமாக மற்றும் கேளிக்கையுடன் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். பூக்கார தெருவில்  லேடி  திருச்சபையின் ஆண்டு விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெறுகிறார்கள். 

தி கிரேட் கதீட்ரல் சர்ச் செயின்ட் பீட்டர் தேவாலயம், கோட்டை தேவாலயம் மற்றும் அனைத்தும் தஞ்சாவூரில் இருக்கும் மத நல்லிணக்கத்துக்கு  மிகச் சிறந்த சான்றாக உள்ளது. 

Church
Church

அதே போல் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வேளாங்கண்ணி தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் எப்போதும் இயேசு பிறந்த நாளை ஒட்டி நடைபெறுகிறது. 

திருச்சி தூய நீட் பார் ஆலயம், மதுரை செயின்ட் மேரி தேவாலயம், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் அனைவரும் ஒன்றுகூடி உலக அமைதிக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது தஞ்சாவூர் தூய இருதய பேராலயங்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற பேராலயங்கள் ஆகும்.