• December 5, 2024

 “சித்தர்கள் பயன்படுத்திய தங்க மூலிகை..!” – மஞ்சள் கரிசலாங்கண்ணி..

  “சித்தர்கள் பயன்படுத்திய தங்க மூலிகை..!” – மஞ்சள் கரிசலாங்கண்ணி..

manjal karisalankanni

இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் எண்ணற்ற வியாதிகளின் கூடாரமாக மனிதர்கள் மாறி வருகிறார்கள். இதற்கு காரணம் அவர்களது உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு இருக்கக்கூடிய மாறுபாடு மட்டுமல்லாமல், இயற்கைக்கு மாறாக கிடைக்கக்கூடிய உணவு வகைகளை உண்பதும் தான்.

எனவே உங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீண்ட ஆயுளோடு வாழ சித்தர்கள் பயன்படுத்திய சில மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உன்னதமான ஆரோக்கியத்தை பெறுவதோடு, நீண்ட ஆயுளோடும் வாழ முடியும்.

manjal karisalankanni
manjal karisalankanni

நீங்கள் உணவில் தங்க மூலிகை என்று அழைக்கப்படக்கூடிய மஞ்சள் கரிசலாங்கண்ணியை பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் அடையலாம். இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரைகளின் ராணி என அழைக்கப்படுகிறது.

இந்தக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து, தங்கச்சத்து உள்ளதால் இதை தங்க மூலிகை என்று சித்தர்கள் வரையறுத்து உள்ளார்கள். மேலும் இந்த கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் காணப்படுகிறது. இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணி பார்ப்பதற்கு தங்கம் போல ஜொலிக்கும் தன்மை கொண்டதால் இதை நீங்கள் உணவாகவும், மருந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தக் கீரையை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் ஏற்படுகின்ற தொற்றுக்களை நீக்கக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இன்று அபரிமிதமாக அதிகரித்து இருக்கும் நீரழிவு நோயாளிகள், இந்த கீரையை பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவை நோயை கட்டுப்படுத்தலாம்.

manjal karisalankanni
manjal karisalankanni

அடிக்கடி சளி பிடிக்கிறது, தும்மல் வருகிறது, இருமல் ஏற்படுகிறது என்று கூறக்கூடிய நீங்கள் இந்த கீரையை அதிக அளவு பயன்படுத்தும் போது சுவாச சம்பந்தமான நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கீரை ஒரு மிகச்சிறந்த வரப் பிரசாதம் என கூறலாம்.

உடலில் இருக்கின்ற அபரிமிதமான கொழுப்புகளை கரைக்கக் கூடிய தன்மை இந்த கீரைக்கு உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணியை, கீழாநெல்லியோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிப்பதன் மூலம் ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதோடு ஈரல் வீக்கமும் நீங்கும்.

நீங்கள் மருந்தாக பயன்படுத்தும் போது புளி, காரம் எண்ணெய் சேர்க்காமல் இருப்பது மிகவும் சிறப்பானது. ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்ப்பதன் மூலம் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

manjal karisalankanni
manjal karisalankanni

முடி அதிக அளவு வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் கரிசலாங்கண்ணி சாறை எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து சற்று சூடு செய்து அந்த எண்ணெயை உங்கள் தலைமுடி களுக்கு தேய்த்து வர தலைமுடியில் இருக்கக்கூடிய வேர்க்கால்கள் வலிமை அடைவதோடு மட்டுமல்லாமல் இளநரை ஏற்படாமல், தலைமுடி நன்கு வளரும்.

விஷக்கடிகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படக்கூடிய இந்த கரிசலாங்கண்ணி இலையை அரைத்து விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் கட்டிவிட்டால் விஷம் முறிந்து விடும்.

சற்று கசப்பு சுவையோடு இருக்கக்கூடிய இந்த கரிசலாங்கண்ணியை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை டீ வைத்து குடிக்கலாம். இதன் மூலம் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.