
“MAYDAY” (m’aidez in French) என்பது விமானத்திற்கு (மற்றும் பயணிகளுக்கு) கடுமையான ஆபத்து, உயிர் சேதம் ஏற்படும் அபாயம் அல்லது உடனடி அபாயம் இருக்கும் பட்சத்தில் ATC கு தெரியப்படுத்த மற்றும் கவனம் ஈர்க்க பயன்படுத்த படும். ATC பதில் அளிக்காத பட்சம், அபாய அறிவிப்பு அலை (121.5 MHz) இல் அறிவிக்கப்படும் உதவி கிடைக்கும் வரை.
மே டே அறிவிப்பு, பின் வருமாறு இருக்கும்:
MAYDAY MAYDAY MAYDAY THIS IS SpeedBird783 (identification or call sign) Nature of emergency, position, any other additional information (Fire on-board, requesting immediate return to airport, 232 souls onboard, flight level 320, heading 180 etc)

MAYDAY அறிவித்த விமானத்திற்கு தங்களால் இயன்ற அணைத்த உதவிகளும் தரைத்தளம் உதவும், விமானத்தையும் பயணிகளையும் காப்பாற்ற.
மற்ற விமானங்கள் அந்த வான்பகுதியில் இருந்தால், உதவி கோரும் விமானத்தில் இருந்து விலகி செல்ல கட்டளை இடப்படும் (ஆபத்தை பொறுத்து), மற்ற விமானங்களுக்கு வேறு அலைவரிசை தரப்படும் தகவல் தொடர்புக்கு, மேலும் விமானிக்கு சகல அனுமதியும் அளிக்கப்படும் விமானத்தை பத்திரமாக தரையிறக்க அவருக்கு உதவு செய்ய.
கடுமையான ஆபத்து இல்லாத பட்சத்தில், நிலைமை சமாளிக்க கூடிய அளவில் உள்ளபோது, “PAN-PAN“ பயன்படுத்தபடும்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowகூடுதல் தகவல்
பொதுவாக விமான தொடர்புகளில் “மே டே” எனும் வார்த்தை, ‘விமானம் மிகவும் இக்கட்டான சூழ்நிலை’யில் உள்ள போது மட்டுமே பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.
இந்த வார்த்தையின் குறிப்பின்படி ‘விமானம் இக்கட்டான சூழலில் இருப்பதால், தகவல் தொடர்பு மற்ற காரியங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதனை கவனத்தில் கொள்ளுங்கள்’ என்று விமான நிலையத்தோடு இவர்கள் சூசகமாக அறிவிக்கும் வார்த்தையாகும்.
மற்ற சாதாரண பிரச்சினைகளின் போது ‘மே டே’ பயன்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர காலங்களில் இக்கட்டான சூழலில் விமானம் மற்றும் கப்பல்களில் இருந்து சொல்லப்படும் மேடே சத்தத்திற்கும் உழைப்பாளர் தினத்திற்கும் சம்பந்தமில்லை.
1923 ஆம் ஆண்டில் மேடே ஒரு சர்வதேச துயர அழைப்பாக இந்த சொல் ஆரம்பமானது.
இது 1948 இல் அதிகாரப்பூர்வமான தகவல் குறியீடுடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
லண்டனில் உள்ள குரோய்டன் விமான நிலையத்தில் மூத்த வானொலி அதிகாரியாக இருந்த ஃபிரடெரிக் மோக்ஃபோர்டின் மனதில் உதித்த யோசனை இது.
அவர் “மேடே” என்ற , என்ற இந்த சொல்லை அறிமுகப்படுத்தினார். ஏனென்றால், இது பிரெஞ்சு வார்த்தையான மைடர் போல ஒலித்தது, அதாவது “எனக்கு உதவுங்கள்” என்பது இதன் பொருள்.
‘மேடே’ என அறிவிக்கப்பட்ட பின்பும் சில நேரங்களில் விமானங்கள் பாதுகாப்பாக இக்கட்டுக்குத் தப்பி இறங்கியதாகவும் தகவல்கள் உண்டு.