“துவண்டு இருக்கும் உன்னை தூக்கி விடும்”- நம்பிக்கை வார்த்தைகள்..!
என்னால் மட்டும் ஏனோ எதுவுமே செய்ய முடியவில்லை என்று நீங்கள் துவண்டு இருந்தால், அதற்கு காரணம் உங்கள் மீது இருக்கக்கூடிய அபரிமிதமான நம்பிக்கையை உங்களால் செயல்படுத்த முடியவில்லை என்று தான் அர்த்தம்.
உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லவும், இது போன்ற தன்னம்பிக்கை தரக்கூடிய வரிகளை தினமும் நீங்கள் சொல்லி வந்தாலே போதும். கட்டாயம் முன்னேற்றம் ஏற்படும்.
மார்ட்டின் லூதர் கிங்கின் கூற்றுப்படி வாழ்க்கையில் கஷ்டங்கள் வலிமையானது. ஆனால் அந்த வலிமையான கஷ்டத்தை நீ எதிர்கொண்டு அதை சரி செய்ய, உன் மீது உன் நம்பிக்கை வைத்திருந்தால் போதுமானது. நிச்சயம் அந்த கஷ்டங்களில் இருந்து வெளிவருவாய் எனக் கூறியிருக்கிறார்.
மாவீரன் நெப்போலியன், நல்ல காரியங்களை செய்ய ஒரு போதும் பயப்படக்கூடாது. அந்த காரியங்களை தாமதப்படுத்தாமல் உடனே செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.
எதற்கு எடுத்தாலும் கோபப்படுவதை விட்டுவிட்டு, என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சிந்தித்து செயல்படுத்துவதின் மூலம் வெற்றி இலக்கை அடைவதற்கு வழி ஏற்படும்.
உன்னிடம் ஒளிந்திருக்கும் அச்சத்தை நீ விட்டுவிட்டால் தான், அரங்கத்தில் ஏற முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களோடு இருக்கும் ரத்த உறவுகளை விட மற்ற உறவுகள் தான் உங்களுக்கு கை கொடுக்கும்.
நீ உன்னுடைய சிந்தனைகளை எப்போதும் விதைத்துக் கொண்டே இரு, அப்போதுதான் உன் லட்சிய பாதையில் நீ பயணம் செய்ய எளிதாக இருக்கும்.
உங்களுடைய மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் நீங்கள் தான் காரணம் என்று புத்தர் கூறியிருக்கிறார். எனவே அந்த வார்த்தைகளை உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
உங்களையே நீங்கள் நம்புவது தான் நீங்கள் உயர்வடைய கூடிய நிலைக்கு உங்களை கொண்டு செல்லும் இந்த நிலை நிச்சயம் ஒரு நாள் உங்களுக்கு வெற்றியை ஏற்படுத்திக் கொள்ளும்.
எப்போதும் நீங்கள் முயற்சி செய்வதை விட கூடாது. ஆனால் முயற்சியை எந்த இடத்தில் துவங்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு நீங்கள் செய்வதின் மூலம் அதிக அளவு வெற்றிகள் வந்து சேரும்.
உன் பலம் தான் வாழ்க்கை, அதுவே பலவீனமாக மாறினால் மரணம் என்பதை புரிந்து கொண்டு முன்னாள் செல்ல முயற்சி செய்.
எழுமின், விழுமின் உங்கள் குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைக்க வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை உணர்ந்து செயல்பட்டால் கட்டாயம் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
மேலும் உலகின் குறைகளை பற்றி பேசாமல் நீ அந்த உலகிற்கு உதவி செய்ய விரும்பினால் அதை செயல்படுத்த என்ன வழி என்று யோசித்து செயல்பட வேண்டும்.
அதற்காக உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நீ நிரப்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் பகலிலும், இரவிலும் உன் சிந்தனை அதை நோக்கியே இருக்க வேண்டும். அப்போது தான் உன்னிடம் இருந்து நல்ல செயல்கள் ஏற்படும்.