வெற்றி உனதே

நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள்!

உங்கள் நண்பரை பற்றி யாராவது உங்களிடம் சொல்லவந்தால், அவர்களிடம் இந்த 3 கேள்விகளை கேளுங்கள்!

  1. “என் நண்பன் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா?”
  2. “என் நண்பன் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா?”
  3. “என் நண்பரைப்பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா?”

இந்த மூன்று கேள்விகளும் “ஆம்” என்று சொன்னால் மட்டும், சொல்ல வந்தவரிடம் மேற்கொண்டு பேசுங்கள்.
“இல்லை” என்று அவர்கள் சொன்னால், நேரடியாக நீங்கள் பார்க்காத, நல்ல விஷயமுமில்லாத, யாருக்கும் பயனில்லாத என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்” என்று நேரடியாகவே சொல்லிவிடுங்கள். ஏனென்றால்,

நல்ல நட்பு இங்கு கிடைப்பதை விட, கிடைத்த நல்ல நட்பை இழந்தவர்களே இங்கு அதிகம்!

ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உறவுக்கு ஒருபடி மேலே அமைந்தவர்கள் நண்பர்கள். வேறுபட்ட கருத்துக்களால் பிரிந்தாலும், தன் நண்பனைப் பற்றி பிறரிடம் குறைகளும் பழிகளும் பேசாமலிருப்பதே ஒரு சிறந்த நட்பு. ஆனால் அப்படி பட்ட நட்பு கிடைப்பது ஒரு வரம்.! அந்த வரம் வேறெங்கும் இல்லை. நம்மிடையே தான் இருக்கிறது! நல்ல நட்பை என்றும் இழந்துவிடாதீர்கள்!

என்னைவிட்டு பிரியாத ஒரு காதல் வேண்டும் என்று வேண்டுவதை விட, பிரியாத, அழியாத, தொலைக்காத, துன்பம் தராத, துவண்டுபோகாத “ஒரு நல்ல நட்பை தா.. இறைவா” என்று வேண்டுங்கள். அப்படி ஒரு நட்பு கிடைத்தால், அதை நங்கூரமாய் நறுக்கென்று பிடித்துக்கொள்ளுங்கள். நல்ல நட்பை தொலைத்துவிடாதீர்கள்.

இழந்த காதலை வேறு ஒரு ஆணிடமோ, பெண்ணிடமோ பெற்றுவிடலாம். ஆனால் எக்காலத்திலும், இகழக்கூடாத ஒன்று நட்பு!

இந்த உலகத்தை உருவாக்கியது ஐம்பூதங்கள் என்றால், ஒரு மனிதனை நல்ல மனிதமாக மாற்றுவது நட்பு தான்!

Friends Hug GIF by MOODMAN

நெருப்பை போல், எல்லா அழுக்கையும் அழிப்பது நட்பு!
நீரை போல், எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருப்பது நட்பு!
நிலம் போல், எல்லாவற்றையும் பொறுமையாக தாங்கிக்கொள்வது நட்பு!
காற்றை போல், அனைத்து இடத்திலும் இருப்பது நட்பு!
ஆகாயம் போல், எல்லையற்றது நட்பு!

இவர்களை போல் யாரும் இல்லை” என்கிற அந்த இடம், தாயிக்குப் பின் நண்பன் ஒருவனுக்கே!
நேற்று இன்று நாளை என, சிலவற்றிற்கு காலம் புது பெயரை வைக்கும்.
நேற்று விதையாக இருந்த ஒன்று, இன்று செடியாக மாறி, நாளை மரமாக மாறலாம்!
நேற்று தோழியாக இருந்த பெண், இன்று காதலியாக இருந்து, நாளை மனைவியாக மாறலாம்!
ஆனால், நண்பன் மட்டுமே, நேற்றும் இன்றும், நாளையும் என்றும் அவன் நண்பனே!

உலகில் ஆக பெரிய அதிசயம் நட்பு!
மானுடத்தின் மிக பெரிய வரம் நட்பு!
ஏற்றத்தாழ்வு இல்லாத, அதை சிறிதும் விரும்பாத ஒரே உறவு நட்பு!
சாதி, மதம், இனம் எல்லாவற்றுக்கும் அப்பார்பட்டது நட்பு!
எதையும் விட்டுகொடுக்கும் நட்பு!
எதையும் பெற்றுத்தருவது நட்பு!
வயது வரம்பு இல்லாத, அதிசய உறவு நட்பு!
குதுகுலத்தின் பிறப்பிடமும், சந்தோஷத்தின் இருப்பிடம் நட்பிடம் தான்.

அவர்களை வார்த்தைகளால் பழிக்காதீர்கள்.!
வசவுகளால் அவர்களின் இதயத்தை கிழிக்காதீர்கள்!
அவர்களை இழி மொழியால் துளைக்காதீர்கள்.!
நட்பை வன்முறையால் இழக்காதீர்கள்..!

நட்பால் சாதித்து, நட்பால் உச்சம்தொட்டு, நட்பால் வெற்றியைப் பெற்றவர்கள் இங்கு உண்டு ஏராளம்.
பழைய காதலியின் பெயரை தன் பிள்ளைக்கு வைப்பவர்களை விட, இழந்த நண்பனின் பெயரை தன் குழந்தைக்கு வைப்பவர்களும் இங்கு உண்டு தாராளம். சாவுக்கும் வாழ்வுக்கும் சாணத்தூரம் இருந்தாலும், நட்போடு இருக்கத்தோன்றுவது மனம். உலகத்து கவிஞர்களிடம் ஒவ்வொரு வரியாக கடன்வாங்கி கவிதை எழுதினாலும், அந்த வரிகளுக்குள் அடங்காத ஒன்று நட்பு.

நண்பன் அருகில் இருந்தால், இந்த உலகமே நமக்கே சொந்தம் போல தோன்றும்!
தன்னை வெல்ல ஆளில்லை என்று தருக்கி திரிய தோன்றும்!!
நல்ல நட்பை என்றும் இழந்துவிடாதீர்கள்!


யார் இந்த எழுத்தாளர்

Deepan

Deepan

Script writer, Video Editor & Tamil Content Creator

Latest Posts

உங்கள் படைப்புகளை அனுப்ப