• September 13, 2024

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய குணங்கள்..!

 செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய குணங்கள்..!

Praggnanandhaa

இளம் செஸ் மாஸ்டர் ஆன பிரக்யானந்தா இந்த சின்ன வயதில் அளப்பரிய சாதனையை படைத்து புகழில் உச்சத்தை ஏட்டி இருக்கிறார். இவரின் வளர்ப்பு மற்றும் பண்பு நலன்கள் பலவும் இன்றைய குழந்தைகள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படிக்கலாம்.

விஸ்வநாத ஆனந்திக்கு பிறகு செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொடுத்திருக்கக் கூடிய இளம் விளையாட்டு வீரர் பிரக்யானந்தா செஸ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி இரண்டாவது பரிசை தட்டி இருக்கிறார்.

Praggnanandhaa
Praggnanandhaa

18 வயது உடைய இந்த இளம் வீரர், உலகின் முன்னணி வீரரான மெக்னஸ் கால்சனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இந்த இடத்தை பிடித்திருக்கிறார். இவரது பிரம்மாண்டம் வெற்றிக்கு பின்னால் இவர் தாயின் துணை பக்க பலமாக இருந்துள்ளார். மேலும் ஒவ்வொரு தாயும் இந்த தாயிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது என்று கூறலாம்.

அந்த வகையில் பிரக்யானந்தா எப்போதும் அவர் பேச்சும் பேசில், விடும் மூச்சில், செஸ் என்ற போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் இவரது தங்கையும் இவரை போலவே செஸ்சில் அதிக ஈடுபாடு உள்ளவராக இருக்கிறார். ஒரு இலக்கின் மீது குழந்தை எந்த அளவு உறுதியோடு இருக்க வேண்டும் என்பதை காட்டும் தன்மை மற்றும் அவரது தாயின் அவர்களுக்கு துணையாக இருக்கிறார் என்பதை நாகலட்சுமி வெளிப்படுத்தி இருக்கும் விதத்தை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

ஒவ்வொரு போட்டியின் போதும் முதல் காயை நகர்த்துவதற்கு முன்பாக பிரக்யானந்தா இறைவனிடம் வேண்டி வெற்றியை நோக்கி மனதை ஒருமைப்படுத்த பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Praggnanandhaa
Praggnanandhaa

 அது மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சிகள், திரைப்படம் ஆகியவற்றை இவர் கவனம் செலுத்துவது கிடையாது. எந்த சலிப்பும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் செஸ் விளையாடுவார். இதைத்தவிர செஸ் தொடர்பான ஆன்லைன் கல்வியையும் பற்றி வருகிறார்.

உணவு விஷயத்தை பொருத்தவரை வீட்டு உணவையே அதிகம் விரும்பி உண்ணக்கூடிய இவர், பெரும்பாலான குழந்தைகள் விரும்பும் துரித உணவுகளை நாடிச் செல்வதில்லை. மேலும் ஹோட்டல் உணவுகளையும் அவர் அதிகமாக எடுத்துக் கொள்வதில்லை.

இவர் விளையாடும் செஸ் போட்டியில் அதிரடியாக எதிரணி காய்களை தாக்குவதும் கிடையாது. அதே சமயம் தற்காப்பு நிலையில் ஆடுவதும் கிடையாது. எந்த சமயத்தில் எந்த காயில் நகர்த்த வேண்டும் என்பதை காணக் கச்சிதமாக முடிவு செய்து விளையாடுகிறார்.

Praggnanandhaa
Praggnanandhaa

இவர் உள் அரங்கு விளையாட்டான செஸ் போட்டியில் விளையாடுவதற்கு மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. எனவே உடல் ஆரோக்கியத்தோடு, மன ஆரோக்கியத்திற்கும் இவர் முக்கியத்துவம் தருகிறார். தினமும் சைக்கிளில் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

ஒவ்வொரு போட்டியிலும் தனது மகனுக்கு பக்க பலமாக இருக்கும் இவர் தாயார் அவரது வெற்றிக்கு பின்னால் இருக்கும் அற்புதமான பெண் என்றால் அது மிகையாகாது.

இவரது விடாமுயற்சியை ஒவ்வொரு குழந்தைகளும் கற்றுக்கொண்டு அவரவர் இலக்குகள் நோக்கி நகரும்போது, நிச்சயமாக எளிதில் வெற்றி அடைய முடியும் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்கிறார். 

அது போலவே பெற்றோர்களும், குழந்தைகளை ஊக்குவிப்பதில் மிகப்பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்பதை எளிமையோடு இருக்கும் இவரது தாயாரும் விளக்கி இருக்கிறார்.