நம்பர் ஒன் இடத்திற்கு வருமா இந்தியா? விண்வெளிச் சந்தையில் இத்தனை வருவாயா?
ரஷ்யாவையும், சீனாவையும் பின்னுக்கு தள்ளி விண்வெளி சந்தையில் முன்னுக்கு வரும் இந்தியா.. உலக நாடுகளில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை தற்போது பிடித்து விட்டது இதற்கு காரணம் சந்திரயான் 3 கொடுத்த வெற்றி தான்.
இந்த வெற்றிக் கனியை சுவைத்ததை அடுத்து சூரிய கோளை ஆராய கூடிய வகையில் ஆதித்யா L1 விண்ணில் ஏவி வெற்றிக்கனியை பறிக்க இஸ்ரோ மற்றும் இந்தியர்கள் காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே அமெரிக்காவானதே சூரியனின் இருக்கக்கூடிய L2 புள்ளிக்கு விண்கலத்தை அனுப்பியது. இதனை அடுத்து இந்தியா L1 புள்ளிக்கு தற்போது விண்கலத்தை ஏவி உள்ளது. தற்போது விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதற்கான சூழ்நிலையை இந்திய அரசு உருவாக்கி உள்ளது.
மேலும் விண்வெளி துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வழி வகைகளை பற்றி ஆய்வு செய்தும் வருகிறது. இதன் மூலம் விண்வெளி சார்ந்த சந்தையில் உலக அளவில் வேகமாக முன்னேறி வரக்கூடிய இந்தியா உலகளாவிய விண்வெளி சந்தையில் தன் பங்கை ஐந்து மடங்கு அதிகரிக்க இந்தியா இலக்கை நிர்ணயித்து உள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பிறகு நிலவில் தரை இறங்கிய உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த மூன்று நாடுகளும் சாதிக்காத சாதனைக்கான நிலவின் தென் துருவப் பகுதியை நம் நாடு அடைந்துள்ளது. இது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
மேலும் இந்தியாவில் வறுமையான சூழ்நிலை நிலவிய 1950 மற்றும் 60 காலகட்டங்களிலேயே விண்வெளி ஆராய்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து 1963 தனது முதல் ராக்கெட்டை ஏவிய போது இந்த நாடுகளோடு இந்தியா போட்டி போடுவதாக யாரும் கருதவில்லை.
சந்திரன் திட்டத்திற்காக சுமார் 70 மில்லியன் டாலர்களை செலவு செய்தார்கள். இந்த பணம் விண்வெளி பயணத்தை திரைப்படமாக காட்டிய இன்டர்ஸ்டெல்லருக்கு செலவிடப்பட்ட 131 பில்லியன் டாலர்கள் பாதி அளவில் ஆகும்.
இதனை அடுத்து விண்வெளி துறையில் தொடர்ந்து வெற்றிகளை வெற்றி பெறும் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து ஒட்டு மொத்த உலக நாடுகளும் வியப்பின் உச்சத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரோ உடன் கூட்டு சேரும் தனியார் விண்வெளி நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில், மிக வேகமாக விண்வெளி துறையில் இந்தியா இன்னும் முன்னேற வாய்ப்புகள் உள்ளது. எனவே சர்வதேச கவனத்தை தற்போது விண்வெளி துறையில் இந்தியா பெற்றுள்ளது.
சந்திரயான் மூன்று விண்வெளி திட்டங்களில் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் முக்கிய பங்குகள் வகித்துள்ளது. இனி வரும் காலங்களிலும் இஸ்ரோவோடு அவை அனைத்தும் இணைந்து செயல்பட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் படு வேகமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சி அடைய உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 150 தனியார் விண்வெளி நிறுவனங்கள் துவங்கப்பட்டு மிக வேகமாக வளர்ந்து வருவதால் பல கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட உள்ளது.