• July 27, 2024

யார் இந்த ஆஸ்டேக்ஸ்? இவர்களுக்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்..!

 யார் இந்த ஆஸ்டேக்ஸ்? இவர்களுக்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்..!

Aztec

ஆஸ்டேக்ஸ் என்ற பெயரைப் பற்றி நீங்கள் கேள்விப்படும் போது உங்களுக்கு புதுமையான பெயராக அது தோன்றலாம். எனினும் இந்த ஆஸ்டேக்குகள் என்பது மெக்சிகோ மாகாணத்தை ஆண்ட ஒரு பழங்குடி இனம் என்பது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக மெக்சிகோவில் இவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உதாரணமாக 50 ஆண்டுகளில் மெக்சிகோ பிராந்தியம் முழுவதும் இவர்களது கலாச்சாரம் மட்டுமல்லாமல் இனம் பரவி உள்ளது என்பது தான் வியப்பை பலருக்கும் ஏற்படுத்தி உள்ளது.

Aztec
Aztec

இவர்கள் பேசிய மொழி ஆஸ்டேக் நஹூவால் என்பதாகும். இந்த மொழியின் எச்சங்கள் இன்றும் உள்ளது என்றால் அது மேலும் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவர்கள் மொழியில் இருந்து பிறந்தது தான் சாக்லேட், மிளகாய், வெண்ணெய் போன்ற சொற்கள் என்றால் உங்களுக்கு பிரம்மிப்பை அது தரும்.

மாயன் இனத்தைப் போலவே இவர்கள் கட்டிடக்கலை மட்டுமல்லாமல் பல்வேறு கலைகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

வரலாற்றில் இவர்களைப் பற்றி சில விஷயங்கள் கூறப்படுகிறது.இதில் சில விஷயங்கள் நேர்மறையாகவும், சில விஷயங்கள் எதிர்மறையாகவும் இருக்கலாம். இதில் குறிப்பாக எதிர்மறையான விஷயம் என்னவென்று பார்க்கும்போது சுமார் 20,000 மேற்பட்ட மனித உயிர்களை பலியிடப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். அதுவும் கோயில் கட்டும் பணிக்காகத்தான் இந்த மனிதர்களை அர்ப்பணித்ததாக குறிப்புகள் உள்ளது.

Aztec
Aztec

மேலும் கொடூரமான சடங்கு முறைகள் இவர்களிடையே காணப்படுகிறது. மனிதன் உயிருடன் இருக்கும் போதே அவர்களின் தோலை கிழிப்பது போன்ற சடங்குகள் அதில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

கட்டாய கல்வி முறையை அன்றே பின்பற்றியவர்கள் தான் இந்த இனத்தவர்கள். மேலும் சிறுவர்களுக்கு போர் சார்ந்த கல்வி மற்றும் வர்த்தக சம்பந்தப்பட்ட படிப்புகள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கும் இந்து மதத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கும் இடையே ஒற்றுமை காணப்படுகிறது. அது எப்படி என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த வகையில் இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள துவாரகா நகரம் கடலில் மூழ்கடிக்கப்பட்ட விவரம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இது போலவே இவர்கள் இனத்தில் இருந்த அஸ்ட்லான் என்ற பண்டைய மீஸா அமெரிக்கன் கலாச்சாரங்களில் இருக்கக்கூடிய ஒரு புராணப் பகுதியாகும். இது ஆஸ்டேக்ஸ் மக்களின் பிறப்பிடம் என்று நம்பப்படுகிறது.ஆனால் இதன் உண்மை நிலை இன்று வரை தெரியவில்லை. எனினும் சில வரலாற்று ஆசிரியர்கள் மெக்சிகோவில் இது அமைந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

Aztec
Aztec

துவாரகா நகரம் எப்படி நீருக்கு அடியில் புதையுண்டு போனதோ அதுபோல இந்த நகரமும் நீருக்கடியில் புதைந்த நகரமாக கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், இந்த இடத்தில் இருந்துதான் ஆஸ்டேக்குகள் தோன்றி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இப்படியாக ஒவ்வொரு மதத்திலும் பிரளயங்கள் ஏற்படுவதும் மிகச் சிறந்த நகரங்கள் அந்த நீருக்குள் முற்றிலும் புதைந்து போவது குறித்த தகவல்கள் ஒரே போல கூறப்பட்டுள்ளதால் இவற்றுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது என நாம் தெரிந்து கொள்ளலாம்.