ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கும் மர்ம கோட்டை..!”- ராஜா ஜகத்பால் சிங் கோட்டை..
200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ராஜா ஜெகத்பார் சிங் கோட்டை ஆனது ராஞ்சியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் பித்தோரியா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைந்திருந்த இந்த கோட்டையில் 100 அறைகள் இருந்துள்ளது. ஆனால் தற்போது இந்த கோட்டை மின்னல் தாக்குதலால் சிறிது, சிறிதாக அழிந்து அழிவின் விளிம்பில் உள்ளது.
பழமையான இந்த கோட்டையானது பிரபலமானதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அந்த காரணம் என்னவெனில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோட்டை மின்னலால் தாக்கப்பட்டு சேதம் அடைந்து வருகிறது.
மன்னர் ஜகத் பால் சிங் தந்தையோடு சேர்ந்து பித்தோரியாவை ஒரு முக்கிய வர்த்தக நிறுவனமாக மாற்றியதோடு, இந்த நகரம் மிகச் சிறப்பான முறையில் முன்னேறியதை அடுத்து ஆங்கிலேயர்களின் கவனம் இந்த நகரத்தின் மீது பட்டது.
இதனை அடுத்து 1857ஆம் ஆண்டு சிப்பாய் கழகம் நடக்கும் போது எந்த மன்னர் ஆங்கிலேயருக்கு உதவும் ஆளாகத்தான் இருந்துள்ளார். அதனை அடுத்து அந்தப் பகுதியில் விடுதலைப் போராட்டத்திற்காக போராடிய தாக்கூர் விஸ்வநாத் சஹ்தியோவின் போராட்டத்தை ஒடுக்க ஜகத்பால் சிங் ஆங்கிலேயருக்கு உதவினார்.
இதனை எடுத்து கிளர்ச்சியாள தலைவர் கைது செய்யப்பட்டு மரணம் வரை தூக்கில் இட வேண்டும் என்ற உத்தரவு விட்டார்கள். தனது தண்டனையை கேட்டறிந்த விஸ்வநாத் மன்னர் ஜெகத்பால் ராஜ்ஜியத்தின் முடிவு மின்னலால் தாக்கப்பட்டு கோட்டை தூசியாக மாறும் என்று சபித்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதற்கு ஏற்றது போலவே இந்த கோட்டை ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் மின்னலால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சேதம் அடைந்து வருகிறது.
ஆனால் இங்கு அதிக அளவு உயரமான மரங்கள் மற்றும் மலைகள் இருப்பதால் இரும்புத்தாது இந்த பகுதியில் அதிகமாக காணப்படுவதால் தான் மின்னல் இதை நோக்கி ஈர்க்கப்பட்டு ஆண்டுதோறும் இந்த கோட்டையின் மீது விழுந்து கோட்டையானது அழிந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதை எடுத்து இந்த கோட்டை செல்வ செழிப்பாக இருந்த போதும் இதைவிட பன்மடங்கு இரும்புத்தாது இருந்திருக்கும் அல்லவா? ஏன் ஆனால் அப்போது ஏன் இங்கு மின்னல் விழவில்லை என்ற கேள்வியை முன் வைப்பதோடு, சாபத்தின் விளைவாகவே இது நிகழ்கிறது என்பதை உறுதியாக மக்கள் நம்புகிறார்கள்.