• October 7, 2024

“அட.. அது.. என்ன.. கொல்லிமலை ரகசியம்..!” – அவிழும் மர்மம் முடிச்சுகள்..

 “அட.. அது.. என்ன.. கொல்லிமலை ரகசியம்..!” – அவிழும் மர்மம் முடிச்சுகள்..

Kolli hills

இந்தியாவின் தெற்கு பகுதியில் தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் திருச்சி மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர் தான் இந்த கொல்லிமலை ஆகும்.

கொல்லிமலையானது கிழக்குத் தொடர்ச்சியின் மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது மேலும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் பெயருக்கு ஏற்றபடி தொடர்ச்சியாக மலைகள் இல்லாமல் விட்டு விட்டு மலை இருக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும்.

மனிதர்களை கொல்லக் கூடிய கொடிய நோய்களை நீக்கக்கூடிய அற்புத ஆற்றல்மிக்க மூலிகைகளை கொண்டு விளங்குவதால் தான் இந்த மலையை கொல்லிமலை என்று அழைப்பதாக செவி வழி செய்திகள் உள்ளது.

Kolli hills
Kolli hills

நாமக்கல்லில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் முதல் 1600 மீட்டர் உயரம் உடைய இந்த மழைக்கு வடக்கு தெற்காக 28 கிலோமீட்டர் வரப்பளமும் கிழக்கு மேக்காக 19 கிலோமீட்டர் பரப்பளவு மொத்தத்தில் 441.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

கொல்லிமலையில் பல பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள் மேலும் இந்த மலையில் சுவேதா ஆறு, கோம்பையாறு, அய்யாறு, கூட்டாறு, கருவோட்டாறு, கல்லங்குழியில் பஞ்சநதி போன்ற ஆறுகள் உற்பத்தியாகிறது.

மேலும் இந்தப் பகுதியில் அதிகமாக கொள்ளிவாய் பறவைகள் வசித்ததின் காரணத்தால் கொல்லிமலை என்று அழைக்கப்படுகிறது என்று பலர் கூறுகிறார்கள் அடர்ந்த வனப்பகுதியில் பல மூலிகைகள் காணப்படுகிறது.

இந்த கொல்லிமலையின் பரம ரகசியம் என்ன என்று ஆய்வு செய்து பார்க்கையில் இன்றும் கூடுவிட்டு கூடு பாயும் சித்தர்கள் கொல்லிமலையில் உலா வருவதாக தெரியவந்துள்ளது.

Kolli hills
Kolli hills

மேலும் இந்த மலையில் புராண காலம் முதற்கொண்டே பல சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மலையில் காணப்படுகின்ற சில அபூர்வ மூலிகைகளை நாம் எடுத்துக் கொண்டால் உடனே மாயமாக மறைந்து விடுவார்களாம் அது போன்ற மூலிகைகளை உட்கொண்டு தான் இன்றும் பல சித்தர்கள் நம் கண்களுக்குத் தெரியாமல் அந்தப் பகுதியில் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

இங்கு காணப்படக்கூடிய அற்புத மூலிகையான ஜோதிப்புல் என்ற செடி விடிய விடிய சுடர் விட்டு எறியக்கூடிய தன்மை கொண்டது என்பதால் அந்த புல்லை பயன்படுத்தி குள்ளர்கள் மற்றும் சித்தர்கள் அங்கு இருக்கக்கூடிய குகைகளில் வாழ்வதாக கூறுகிறார்கள்.

மேலும் இங்கு இருக்கக்கூடிய கொல்லி பாவை என்ற கோயில் அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் மிரட்டும் அமைப்பில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கொள்ளிப் பாதையை யாராவது நேரில் பார்த்தால் தன் கண்களாலேயே அச்சுறுத்தி கொன்று விடக்கூடிய தன்மை கொண்டவள்.

Kolli hills
Kolli hills

அதுமட்டுமல்லாமல் தொழில் பாவை பற்றி சங்க கால நூல்களிலும் அதிக அளவு கூறப்பட்டுள்ளது. இந்தக் கொல்லி பாவையை தான் பழைய சங்க நூல்களில் கொற்றவை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கூடுவிட்டு கூடு பாயும் திட்டங்கள் மட்டுமல்லாமல் இரும்பை தங்கமாக கூடிய சக்தி பறித்த சித்தர்கள் எந்த பகுதியில் அதிக அளவு காணப்படுவதாகவும் அதற்கு உரிய மூலிகைகளை சேகரிக்க அந்த பகுதிக்கு வந்து செல்வதாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.

இங்கு மீனுக்கு மூக்குத்தி போடக்கூடிய பழக்கம் உள்ளது அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லிப் பாவையை வணங்கும்போது அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நோய் நீங்க இங்கு இருக்கக்கூடிய நதிகள் ஒரு மீனைப் பிடித்து அதற்கு மூக்குத்தி போட்டு மீண்டும் நதியிலேயே விட்டுவிடக் கூடிய பழக்கம் இன்றும் தொடர்கிறது.

Kolli hills
Kolli hills

கொல்லிமலை பகுதிகளில் மனிதர்களை உண்ணக்கூடிய தாவரங்கள் இருப்பதாகவும் அந்த தாவரங்களுக்கு அமிலங்களை கரைக்கும் சக்திகள் உள்ளதாக இன்று வரை கூறப்பட்டு வருகிறது.

கொல்லிமலையை நோக்கி செல்லக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது நோக்கம் சிறப்பான நோக்கமினில் அது கண்டிப்பாக நிறைவேறும் என்றும் இந்தப் பகுதிக்கு செல்லக்கூடிய மனிதர்களின் உயிர் ஆற்றல் அதிகரிக்கும் இயன்றும் கூறி இருக்கிறார்கள்.

மேலும் இந்த தொழில் பாவை இன்றுவரை கொல்லிமலையை பாதுகாக்கின்ற காவல் தெய்வமாக திகழ்கிறார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

இப்போது உங்களுக்கு கொல்லிமலை பற்றி இருந்த சந்தேகங்கள் ஓரளவு நிவர்த்தியாக இருக்கும் என்று நினைக்கிறோம் உங்களுக்கும் கொல்லிமலை பற்றி வேறு ஏதேனும் விஷயங்கள் புதிதாக தெரிந்து இருந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.