“உலகம் எங்கும் கொண்டாடப்படும் ஜென்மாஷ்டமி..!” – கிருஷ்ணரை இப்படி வழிபடுங்கள்..
குழல் ஊதிக் கொண்டு பார்க்கும் போதே நம்மை கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மையில் இருக்கும் மாய கண்ணனை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
நீல நிற மேனியோடு மக்களுக்கு தேவையான வரங்களை தந்து நீதியை நிலை நிறுத்தக்கூடிய கண்ணபெருமான் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி, நாளை செப்டம்பர் ஆறாம் தேதி உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
திருமால் எடுத்த அவதாரங்களிலேயே மக்களால் அதிகளவு விரும்பப்படக்கூடிய கதாபாத்திரமாக இந்த கிருஷ்ணா அவதாரம் திகழ்கிறது. கிருஷ்ணர் அவதரித்த இந்த திருநாளை கோகுலாஷ்டமி என இந்தியா முழுவதும் பத்து நாள் விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.
குறிப்பாக இந்த 10 தினங்களும் வடநாட்டில் கிருஷ்ண பூஜைகள் சிறப்பாக நடப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்.
ஆவணி மாத அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்திரத்தில் அவதரித்த கிருஷ்ணன் சிறைச்சாலையில் பிறந்திருந்தாலும், யாதவ குலத்தின் தலைவராக யாதவ குலத்தை காத்த பெருமை மிக்கவர். நீதியை நிலைநாட்ட கடுமையான போராட்டங்களை சந்தித்த பாண்டவர்களுக்கு பக்க பலமாக நின்றவர்.
மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான இந்த திருநாளை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பல பெயர்களால் அழைக்கிறோம்.
இந்த கமல கண்ணன் வாசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த எட்டாவது குழந்தை. இதனை அடுத்து நாளை அஷ்டமி திதியும், ரோகினி நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாள் என்பதால் கோகுலாஷ்டமி நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது.
இந்த தினத்தில் இரவு 9.14 மணிக்கு பிறகு அஷ்டமி திதி துவங்குகிறது. எனவே செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 3:25 மணிக்கு பிறகு ரோகிணி நட்சத்திரம் ஆரம்பிப்பதால் செப்டம்பர் 7ஆம் தேதி முழுவதும் இந்த திதி காணப்படுகிறது.
எனவே அன்றைய இரவு 9. 14 க்கு பிறகு நவமி திதி துவங்குகிறது. மேலும் செப்டம்பர் 7ஆம் தேதி மாலை 3.59 வரை ரோகிணி நட்சத்திரம், அதன் பிறகு மிருகசீரிஷம் ஆரம்பம் ஆகிறது.
இந்து சூழ்நிலையில் பலருக்கும் கிருஷ்ண ஜெயந்தியை ஆறாம் தேதி கொண்டாடுவதா? அல்லது ஏழாம் தேதி கொண்டாடுவதா? என்ற இரு வேறு நிலைகள் உள்ளது. ஆனால் கிருஷ்ணன் நள்ளிரவு நேரத்தில் பிறந்ததால் செப்டம்பர் 6ஆம் தேதி தான் இந்த திருநாளை கொண்டாட உகந்த நாள் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்.
இனிய இத்திருநாளில் விரதம் இருந்து கிருஷ்ணரை வேண்டும்போது வேண்டியது அனைத்தும் கிட்டும் என்று கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 6ஆம் தேதி பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோயிலுக்கு சென்று பூஜைகளிலும் விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம்.
மேலும் அன்று இரவு கிருஷ்ணர் பிடித்த கொய்யா, நாவல் பழம், தேங்காய், வாழைப்பழம், நெய்யால் செய்த இனிப்பு பண்டங்கள், உப்பு சீடை, வெல்லச்சீடை, முறுக்கு, தேன்குழல், அதிரசம், அவல்,வெண்ணை போன்றவற்றை வைத்து கிருஷ்ணர் சிலையையும் வைத்து வழிபடும் போது வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
எனவே நீங்களும் இந்த ஆண்டு வருகின்ற கிருஷ்ண ஜெயந்தி சீரும் சிறப்புமாக கொண்டாடி உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் கிருஷ்ணர் வேடம் போட்டு உங்களது திறமையை வெளிப்படுத்தி கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுங்கள்.
கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் DEEP TALK TAMIL நேயர்களுக்கும் மற்றவர்களுக்கும் எங்களது குழுமம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
“ஹரே கிருஷ்ணா ஹரே ராம, கிருஷ்ண, கிருஷ்ண ஹரே ஹரே”