• July 27, 2024

 நம்ம சந்திரயான் 3 இறங்கியது நிலவின் தென் துருவம் இல்லையா? – பகீர் தகவலை கிளப்பிய விஞ்ஞானி ஓயாங் ஜியுவான் ..

  நம்ம சந்திரயான் 3 இறங்கியது நிலவின் தென் துருவம் இல்லையா? – பகீர் தகவலை கிளப்பிய விஞ்ஞானி ஓயாங் ஜியுவான் ..

chandrayaan-3

நிலவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் என்று கதை பேசி, நம் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிய நாம் இன்று நிலவின் தென் பகுதியை உலக நாடுகள் எதுவும் எட்டிப் பார்க்காத இடத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி தென் துருவ ரகசியத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முதல் நாடு என்ற பெயரை தட்டிச் சென்றோம்.

இந்திய வரலாற்றின் மகத்தான சாதனையாக இது உள்ளதோடு மட்டுமல்லாமல், விண்வெளி துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக நாம் சாதித்து விட்டோம் என்று காலரை தூக்கி தூக்கிவிட்ட சமயத்தில், நமது சந்திரயான் 3 தரையிறங்கியது தென் துருவத்தில் இல்லை என்ற பகீர் தகவலை வெளியிட்டு பரபரப்பை சீன விஞ்ஞானி ஓயாங் ஜியுவான் ஏற்படுத்தி விட்டார்.

chandrayaan-3
chandrayaan-3

சீனா அண்டவெளி விஞ்ஞானியான யுவ சீன அறிவியல் அகாடமி இன் உறுப்பினராக இருக்கக்கூடிய நிலையில் இப்படி ஒரு பரபரப்பான கருத்தினை வெளியிட்டு அனைவரையும் கதிகலங்க வைத்து விட்டார் என கூறலாம்.

அந்த வகையில் இவர் அது தென் துருவம் இல்லை என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்க்கையில் பூமியின் தென் துருவமானது 66.5 மற்றும் 90 டிகிரி தெற்கு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக கூறப்படுவது, என்ன எனில் இந்த சுழற்சி அச்சு சூரியனுடன் ஒப்பிடும்போது சுமார் 23.5 டிகிரி வரை சாய்ந்துள்ளது. மேலும் சந்திரனின் சாய்வு 1.5° மட்டுமே என்பதால் துருவப் பகுதி மிகவும் சிறிதாக இருக்கும் என்ற கருத்தை இவர் பதிவு செய்து இருக்கிறார்.

chandrayaan-3
chandrayaan-3

எனவே நாசாவின் கருத்துப்படி சந்திரனின் தென்துருவத்தை 80 முதல் 90 டிகிரியாக கருதுகிறது. அதே சமயம் ஓயாங் ஜியுவான் கருத்துப்படி சந்திரனின் 1.5 டிகிரி சாய்வை பிரதிபலிக்கும் வகையில், இது வெறும் 85 முதல் 90 டிகிரி வரை சிறிதாக இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே நமது இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் மூன்றை விண்ணில் செலுத்திய பிறகு சந்திரனுக்கு சுமார் ஒரு மாத அளவு பயணத்தை மேற்கொள்ளும் என்று கூறியதோடு ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறக்கம் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து சந்திரயான் 3 இருந்த விக்ரம் லேண்டன் மூலமாக பிரக்யான் தரை இறங்கி சந்திரனில் நமது அசோக சக்கரத்தை பதித்ததோடு மட்டுமல்லாமல் இஸ்ரோவின் லோகோவையும் பதித்து, நிலவில் என்னென்ன உள்ளது என்பதை நமக்கு படங்களாக அனுப்பியது.

chandrayaan-3
chandrayaan-3

இந்நிலையில் தற்போது நிலவில் உறக்க நிலையில் இருக்கும் இந்த இரண்டு கருவிகளும் செயல் இழந்து போனது என்று கூறலாம். இச்சூழ்நிலையில் வரலாற்று சாதனையை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து பேசும் வகையில் சீன விஞ்ஞானி தனது கருத்தை பதிவு செய்திருப்பது பலர் மத்தியில் பலவிதமான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.

எது எப்படி போனாலும் எதை செய்தாலும் ஒரு கூட்டம் அதை மறுத்து பேசுவதற்கு என்றே இருக்கும் என்பதை இவரது கருத்து உறுதி செய்து விட்டது என கூறலாம்.