• July 27, 2024

“மனித மூளைக்குள் 3000 எலக்ட்ரோட் சிப்..!” – எலான் மஸ்க்கிற்கு பச்சைக்கொடி காட்டுமா அரசு..

 “மனித மூளைக்குள் 3000 எலக்ட்ரோட் சிப்..!” – எலான் மஸ்க்கிற்கு பச்சைக்கொடி காட்டுமா அரசு..

Elon Musks Neuralink

மனித மூளைக்குள் சிப்பை பொருத்தி ஆய்வுகள் செய்ய எலான் மாஸ்க்கு நியுரோலின்க் நிறுவனம் அனுமதி அளித்து உள்ளது. பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து இதற்கு விண்ணப்பிக்கலாம் என எலான் மாஸ்கின் நியூரா லிங்க் (Neuralink)நிறுவனம் தற்போது அழைப்பை மக்கள் மத்தியில் விடுத்துள்ளது.

நினைவாற்றல் தொடர்பாக ஆய்வு செய்யவும், இந்த நோய்களில் தாக்கம் உள்ளவர்களை மீட்டெடுக்கக்கூடிய வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் என கூறலாம். அரசின் அனுமதி கிடைத்த பிறகு இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்ற அறிவிப்புக்கள் வந்துள்ளது.

Elon Musks Neuralink
Elon Musks Neuralink

மனிதன் மூளைக்குள் சிப்புகளை பொருத்தி அதனை கணினிகள் மூலம் கட்டுப்படுத்த கூடிய திட்டத்தினால் மனிதர்களின் நோய்களை குணப்படுத்த இந்த சிப் உதவும் என கூறியிருக்கிறார்கள்.

இதற்காக மனிதனுடைய தலையில் ஒரு சிறிய துளையிட்டு உள்ளிருக்கும் மூளைக்குள் சீப் ஓன்றை வைத்து மனிதர்களை கணினி மூலம் கட்டுப்படுத்துவது போல நீங்கள் பல படங்களில் பார்த்திருக்கலாம். சிறிய கட்டளை கொடுத்தாலே போதும் கணினியின் கட்டளையை ஏற்று மனிதர்கள் செயல்படுவது போலத்தான் இந்த தொழில்நுட்பம் இருக்கும்.

திரைப்படங்களில் பார்த்த இந்த தொழில்நுட்பத்தை உண்மையாக கொண்டு வரக்கூடிய திட்டத்தை எலான் மாஸ்க் செயல்படுத்த இருக்கிறார். மனித மூளைக்குள் சிப்பை பொருத்தி நாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை செய்ய அவர் தயாராகி விட்டார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் எலாம் மாஸ், டெஸ்லா கார் நிறுவனத்தின் ஓனர், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதன் பெயரை மாற்றியவர், அதுபோல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் இவர்தான்.

Elon Musks Neuralink
Elon Musks Neuralink

இவர் என்பது சதவீதம் முதலீடு செய்திருக்கும் நிறுவனம்தான் நியூ ரோலிங். இந்த நியூரோலின் நிறுவனம் தான் தற்போது மனித மூளைக்குள் சிறிய சிப்புகளை வைக்க கூடிய திட்டத்தை அறிவித்துள்ளது. தற்போது இந்த திட்டமானது பன்றிகளிடம் ஆய்வு செய்து பார்த்தபோது 87 சதவீத வெற்றியை தந்துள்ளது.

பன்றிகளுக்கு சிப் வைத்து பெற்ற ஆய்வு முடிவுகளை எலான் வெளியிட்டு இருக்கிறார். அந்த முடிவுகளில் கிடைத்துள்ள வெற்றியை அடுத்து இப்போது மனித மூளையிலும் இதுபோல சிப்புகளை பொருத்தி சோதனைகளை செய்ய அவர் அனுமதி பெற்று இருக்கிறார்.

பன்றியில் மேற்கொண்ட ஆய்வில் பன்றி ஒன்றில் சிப் வைக்கப்படவில்லை. சிப் ஏதும் வைக்கப்படாத பன்றி தனது இயல்பான நிலையில் இருந்தது.

இதைப் போலவே GERTRUDE என்று பெயரிடப்பட்ட பன்றியின் மூலையில் நியூரோ லிங்க் வைக்கப்பட்டது.

மேலும் மூன்றாவதாக ஒரு பன்றியின் மூலையில் நியூரோ லீப் வைக்கப்பட்டு அது நீக்கப்பட்டது.

Elon Musks Neuralink
Elon Musks Neuralink

இந்த மூன்று பன்றிகளையும் கொண்டு செய்த ஆய்வில் இரண்டாவது பன்றியின் செயல்பாடுகள் அனைத்தும் மூளையில் பொருத்தப்பட்ட சிப்பின் மூலம் கணினிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் மூலையில் ஏற்படும் மாற்றங்களை கணினியில் கண்டறிய முடிந்தது.

அந்த வகையில் அந்தப் பன்றி என்ன செய்கிறது. என்ன சொல்ல வருகிறது போன்றவை கணினியில் பதிவானது. இந்த நிகழ்வை அப்படியே லைவாக எலான் போட்டு காட்டியுள்ளார். சிப் நீக்கப்பட்ட பன்றி ஆரோக்கியமாகவும் இருந்தது.

பன்றிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை தந்திருக்கும் இந்த சிப் திட்டத்தை மனித மூளைக்குள்ளும் வைக்க முடியும். ரோபோ கருவிகளின் மூலம் சிறிய துளையிட்டு இதை வைக்கலாம். ரத்தம் வராமல் மயக்க மருந்து கொடுக்காமல் இந்த ஆபரேஷனை சுமார் 30 நிமிடத்தில் செய்து முடிக்க முடியும் என்ற கருத்து பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

இந்த சிப் உங்கள் தலையில் உள்ளது, என்பதைக் கூற உணர முடியாத வகையில் மிக நேர்த்தியான முறையில் மூளைக்குள் பொருத்தி விடுவார்கள். இந்த சிப்பில் 3000 எலக்ட்ரோடு கருவிகள் இருக்கும். இது மனித முடியை விட மெல்லிய எலெக்ட்ரோன் நியூரான்கள் உடன் இணைந்து மூளைகளில் இருந்து சிக்னல்களை அனுப்பும். கணினியை கொண்டு இதை கண்காணிக்கலாம்.

ஒரே நேரத்தில் 1024 கணினிகளுடன் இந்த சிப்பை இணைக்க முடியும். ஒரு நாள் முழுக்க இந்த சிப்  செய்யப்பட வேண்டும். வயர்லெஸ் முறையில் இதை சார்ஜ் செய்யலாம். உங்கள் போன் உடன் இதை கனெக்ட் செய்ய முடியும். இதன் மூலம் உங்கள் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று எலாம் மாஸ் கூறுகிறார்.

Elon Musks Neuralink
Elon Musks Neuralink

இவ்வாறு செய்வதின் மூலம் மனித மூளையின் மூலம் அனைத்து கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். கணினியில் இருந்து சில சிக்னல்களை அனுப்பி பார்வையின்மை, காது கேளாத தன்மை மற்றும் நாள்பட்ட குறைபாடுகளை ஒரே நாளில் குணப்படுத்த முடியும்.

 சிப் மூளைக்கு கட்டளையிட்டு நோய்களை குணப்படுத்தும் அதாவது மூளையில் இருக்கும் செல்களை தூண்டிவிட்டு உடல் குறைபாடுகளை சரி செய்ய இது உதவி செய்யவும்.

மேலும் மன அழுத்தம் மறதி போன்ற வியாதிகளை எளிதில் குணப்படுத்த இது உதவி செய்யும். இதன் மூலம் உங்கள் குழந்தை பருவத்தின் நினைவுகளை நீங்கள் மீண்டும் உங்கள் நினைவுக்கு கொண்டு வந்து பார்க்கலாம். எதிர்காலத்தில் கணினியின் மூலம் தவறுகள் நடக்காமல் இருக்க இது உதவி செய்யும்.

இதுவரை சுமார் 19 விலங்குகளிடம் இந்த சிப்பை வைத்து சோதனை செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தற்போது மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி கோரி இருக்கிறார். இந்த வருட இறுதிக்குள் மனிதர்களிடம் இந்த சிப்பை வைத்து சோதனை செய்ய இருக்கிறார்கள். மேலும் மிகக் குறைந்த விலையில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இதை சிப்பை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.