• October 7, 2024

யாளி உண்மையில் இருந்ததா? – இல்லை கற்பனை சிற்பமா..!

 யாளி உண்மையில் இருந்ததா? – இல்லை கற்பனை சிற்பமா..!

yali

சிந்து சமவெளி நாகரிகம் பற்றி படித்த நமக்கு லெமூரியா நாகரிகத்தின் உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் இன்றும் இருக்கிறோம். பழமையான லெமூரிய நாகரீகம் தான் உலகிற்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்தது என்று சொல்ல வேண்டும்.

இன்று இந்து மத கோயில்களில் அதிகமாக காணப்படுகின்ற சிற்பங்களில் இருக்கக்கூடிய யாளி ஒரு கற்பனை உயிரினச் சிற்பம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த விலங்கினை வியாழன், சரபம் எனும் பெயர்களிலும் அழைக்கிறோம். இந்த யாளி பார்ப்பதற்கு சிங்கம் போன்ற தோற்றத்தை தரும் உயிரினமாகும்.

yali
yali

மேலும் இந்த உயிரினமானது சிங்கம் மற்றும் யானையை விட வலிமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. யாளியில் சிங்க முகத்தில் யானையின் தும்பிக்கை போன்ற உறுப்பு காணப்படும். இந்த விலங்கானது கிமு 25000 ஆண்டுக்கு பின்னர் தான் அறியப்பட்டது.

இந்த யாளியில் பல வகைகள் காணப்படுகிறது. சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டிருக்கும் இதன் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் குறிப்பாக நாய், ஆடு, எலி போன்ற உயிரினங்களின் தலையை யாளியிடம் காண முடியும்.

எனவேதான் இந்த யாளியை சிம்மயாளி, மகர யாளி, யானையாளி என பல்வேறு வகையான பெயர்களைக் கொண்டு அழைத்தார்கள். மேலும் யாளி பற்றிய தகவல் அகநானூறு பாடல் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடும்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி.. என்பது தான். அந்தப் பாடல் வரிகளாகும்.அது மட்டுமல்லாமல் நற்றினிகளும் இந்த விலங்கு பற்றிய பாடல் வரிகள் வந்துள்ளது.

yali
yali

எனவே இந்த விலங்கானது யானையை விட பெரிய மிருகமாக இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் நவகிரகங்களில் ஒன்றாக இருக்கும் புதனின் வாகனமாக இந்த யாளி உள்ளது.

ஒரு சில கோயில்களில் யாளியின் வாயில் முட்டை வடிவில் ஒரு உருண்டை கல் இருக்கும். இதை கைவிட்டு எடுக்க முயன்றாலும் எடுக்க முடியாது. இதனை யாளியின் முட்டை என்று கூறுகிறார்கள்.

இந்த யாளியானது ஒரு கற்பனை உயிரினமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை சங்க நூல்கள் தெள்ளத் தெளிவாக எடுத்து கூறி இருப்பதால் இது டைனோசரை போல லெமூரியா கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம் என்றும் அந்த கண்டம் அழிந்தபோது இதுவும் அழிந்து இருக்கலாம் என்றும் பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகிறது.